அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். முதல் திரைப்படத்திலேயே இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வளர்ந்தார். கிட்டத்தட்ட அவர் இந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலும் வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.
காதல் ரசம் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட அலைபாயுதே திரைப்படம் அவருக்கு, தமிழில் மிகப் பெரிய விலாசத்தை கொடுக்க அதை தக்க வைக்கும் வகையில் அமைந்த திரைப்படம் மின்னலே. இதுவும் காதல் திரைப்படம் தான் என்றாலும் அதில் கலந்து கட்டி அடித்திருப்பார் மாதவன்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு ஒரு நல்ல இமேஜை பெற்றுக் கொடுத்தன. இதன்பிறகு, அவருக்கு வெளியான ரன் திரைப்படம் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான இமேஜை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தம்பி திரைப்படத்திலும், சண்டைக் காட்சிகளில் சமரசம் இல்லாமல் விளையாடினார் மாதவன்.
இதன் பிறகு, இந்தி திரையுலகிற்கு சென்ற மாதவன் அங்கு தனது வெற்றி கொடியை நாட்டினார். 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடன் நடித்திருப்பார் மாதவன். இந்த நிலையில் தமிழில் சிறிது இடைவெளி விட்டிருந்த அவருக்கு, கம்பேக் திரைப்படமாக அமைந்தது இறுதிச்சுற்று. நரைத்த முடியுடன் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்த அவர் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளினார்.
காட்சிக்கு காட்சி தேர்ந்த நடிப்பை கொடுத்திருந்த மாதவன், அந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் பல படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இதில் விக்ரம் வேதா திரைப்படமும் அவருக்கு நல்ல இமேஜை பெற்றுக் கொடுத்தது. தற்போது டெஸ்ட் இன்னும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடன் சித்தார்த், நயன்தாரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு திரைப்படங்களில் அவர் புக்காகி இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. இதற்காக தலா பத்து முதல் 15 கோடி ரூபாய் அவர் சம்பளம் பெற்று இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இப்படி மாதவன் ஒரேடியாக படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் துபாயில் ஒரு வீடு கட்டி வருகிறாராம். அங்கேயே செட்டில் ஆகவும் அவர் முடிவு செய்துள்ளாராம். இந்த நிலை இந்த வீட்டிற்க்கான கடனை அடைப்பதற்காக தான் முழு வீச்சில் படத்தில் நடிப்பதற்கு மாதவன் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம் அவர் எதற்காக துபாயில் செட்டில் ஆக முடிவு செய்து இருக்கிறார் என்றும் சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





