தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் நடிகர் கவுண்டமணிக்கு இருக்கிற ரசிகர்கள் கூட்டம் என்பது இன்னும் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம். அவரது காமெடியை அவரது நக்கல் பேச்சை இன்றும் ரசிகர்கள் வெகுவாக கைதட்டி ரசித்து பார்க்கின்றனர். காமெடி கிங் என்றுதான் கவுண்டமணி அழைக்கப்படுகிறார்.
இயக்குனர் கே பாக்யராஜ் தான் கவுண்டமணியிடம் உள்ள திறமையை பார்த்து அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் காளியண்ணன் என்கிற பெட்டிக்கடை டெய்லர் கேரக்டரில் நடிக்க வைத்தார். இப்போதும் சரோஜா குப்பை கொட்றியா? கொட்டு கொட்டு டயலாக் டிரண்டிங்கில் இருக்கிறது.
பிரபலமான அரசியல் தலைவர்கள் நடிகர் நடிகைகள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக 60 வயது 70 வயது தாண்டிய நடிகர் நடிகைகள் என்றால் அவர்கள் திடீரென இறந்து விட்டதாக சில விஷமிகள் வதந்தி பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள். ரசிகர்களும் தகவல் கேட்டு ஷாக் ஆகி விடுகின்றனர். நடிகர் கவுண்டமணி குறித்தும் அப்படி வதந்தி சிலமுறை வந்திருக்கிறது.
நடிகர் கவுண்டமணி குறித்து இயக்குனர் கஸ்தூரிராஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஒரு தடவை கவுண்டமணி இறந்துட்டாருன்னு நியூஸ் வந்துடுச்சு. நான் பதறி போயிட்டேன். ஆனால் கண்டிப்பா அது உண்மையா இருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் நாம எதுக்கும் போன் பண்ணி பாப்போம்ன்னு அவருக்கு போன் பண்ணினேன்.
போனை எடுத்ததும் நான் கவுண்டர் தான் பேசறேன். இன்னும் உயிரோடுதான் இருக்கேன்னு சொன்னார். இல்லே, உங்கள பத்தி ஒரு தப்பான நியூஸ் வந்துடுச்சுன்னு சொன்னேன். அதுக்கு அவர், எவனோ நான் செத்துட்டதா பொய்யை சொல்லிட்டான்.ஊர்ல இருந்து இப்போ லாரியில் வந்துட்டு இருக்காங்க.
இவனுங்களுக்கு வேற நான் இனி சோறாக்கி போடணும்ன்னு கிண்டல் பண்ணினார். அதோட வாயை பொத்திக்கிட்டு இதுக்கு மேல நாம ஏதாவது கேட்டா கலாய்ப்பார் என்று போனை வைத்துவிட்டேன். ரொம்ப வெள்ளந்தியான விசித்திரமான மனுஷன் கவுண்டர் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா அதில் கூறியிருக்கிறார்.





