- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அடுத்த ஹீரோ, இவர் மாஸ் வில்லன் நடிகராச்சே? - போடு...

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அடுத்த ஹீரோ, இவர் மாஸ் வில்லன் நடிகராச்சே? – போடு வெடிய… வெளியான டீசர் வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெரிய அளவில் நட்சத்திர நடிகராக இல்லாவிட்டாலும் அவர்கள் மிகச் சிறந்த நடிப்பாற்றமிக்க கலைஞர்களாக இருப்பார்கள். அசோகன் ரங்காராவ் துவங்கி சமீபத்திய இளவரசு பொன்வண்ணன் மன்சூர் அலிகான் அருள்தாஸ் எம்எஸ் பாஸ்கர் நாசர் வரை பல நடிகர்கள் அப்படி சிறந்த கலைஞர்களாக இருந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட கலைஞர்களின் வரிசையில் நடிகர் ஆனந்தராஜூம் மிக முக்கியமானவர். தமிழ் சினிமாவில் 1980 – 90களில் பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் ஆனந்தராஜ். அதன்பிறகு சில படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக காமெடி நடிப்பிலும் ஆனந்தராஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்தாலும் நிஜத்தில் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த நல்ல மனிதர்களாக சில நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் நடிகர் ராமராஜன் போன்று நடிகர் ஆனந்தராஜூம் மது புகை போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆனந்தராஜ் நடித்த பாட்ஷா சூரியவம்சம் போக்கிரி புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் அவரது வில்லன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகர் விஜயகாந்த் தனது படங்களில் நடிகர் ஆனந்தராஜூக்கு அதிக முறை வாய்ப்பு அளித்தவர். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்கள் சிலர் ஹீரோக்களாக மாறி விட்டனர். அதே போல் ஹீரோக்கள் சிலர் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் வில்லன் நடிகரான ஆனந்தராஜ் இப்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ எஸ் முகுந்தன் இயக்கத்தில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தில் நடிகர் ஆனந்தராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் சம்யுக்தா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். வடசென்னை பின்னணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

அண்ணா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி சுகந்தி அண்ணாதுரை படத்தை தயாரித்திருக்கிறார். மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் முனிஷ்காந்த் தீபா சசிலயா ராம்ஸ் ஆனந்தபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

- Advertisement -

சற்று முன்