- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் காம்போவில் உருவான மதராஸி படம் - அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ்...

சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் காம்போவில் உருவான மதராஸி படம் – அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

- Advertisement -

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 23வது படம் மதராஸி. இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அமரன் படத்துக்கு முன்பே மதராஸி படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இந்தியில் சிக்கந்தர் படத்தை இயக்க ஏஆர் முருகதாஸூக்கு அழைப்பு வந்ததால், இந்த படத்தை கிடப்பில் போட்டு ஏஆர் முருகதாஸ் மும்பைக்கு சென்றுவிட்டார். அதே நேரத்தில் அமரன் படப்பிடிப்பு இருந்ததால் அந்த படப்பிடிப்புக்கு சிவகார்த்திகேயனும் சென்றுவிட்டார்.

- Advertisement -

ஆனால் அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்த நிலையில், சிக்கந்தர் படம் ஏஆர் முருகதாஸூக்கு பலத்த தோல்வி படமாக அமைந்தது. இது ஏஆர் முருகதாஸ் படம்தானா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தின் தரம் உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இப்போது மதராஸி படத்தின் மீதி படப்பிடிப்புகளை நடத்த அதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் செய்து வருகின்றனர். 10 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய போர்ஷன் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. பராசக்தி படப்பிடிப்புக்கு நடுவில் மதராஸி படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே எதிர்நீச்சல் காக்கிசட்டை வேலைக்காரன் மாவீரன் ஹீரோ அமரன் என அவர் இப்போது நடித்து வரும் பராசக்தி உள்ளிட்ட படம் வரை பழைய படங்களின் டைட்டில்களில் நடித்து வருபவர்தான் சிவகார்த்திகேயன். மதராஸி பட டைட்டிலும் அந்த பழைய பட டைட்டில் சென்டிமென்ட் தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் அர்ஜூன் நடித்த படம்தான் மதராஸி.

சமீபத்தில் மதராஸி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. ரசிகர்களிடம் இந்த வீடியோ பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை இது கடந்துள்ளது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்