- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு அபரிமிதமான வரவேற்பா? சீனாவில் 40 ஆயிரம் திரைகளில்...

நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு அபரிமிதமான வரவேற்பா? சீனாவில் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸாகும் மகாராஜா படம் – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர். இப்போது முன்னணி நடிகராக மக்கள் செல்வன் என்ற அடைமொழியுடன் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக நடத்தி வந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்போது விஜய் சேதுபதி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி முனீஸ்காந்த் சிங்கம்புலி அபிராமி பாரதிராஜா வினோத் சாகர் பி எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த ஒரு முக்கிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. இது விஜய் சேதுபதி நடித்த 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு, பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.

திரையரங்கில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியான மகாராஜா படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஓடிடி தளத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை மகாராஜா படம் பெற்று சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மகாராஜா படக்குழு தரப்பில், டைரக்டர் நித்திலன் சுவாமிநாதனுக்கு ஆடி கார் பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்லையில் மகாராஜா படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை அலிபாபா குழுமம் பெற்றுள்ளது. மகாராஜா படத்தை அலிபாபா குழுமம் 40 ஆயிரம் திரைகளில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் 48 ஆயிரம் திரைகளில் வெளியானது.

இதையடுத்து அதிகபட்சமாக 2ம் இடத்தில் 40 ஆயிரம் திரைகளில் மகாராஜா படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் பாகுபலி 2 படம் 18 ஆயிரம் திரைகளிலும், தங்கல் படம் 9000 திரைகளிலும் சீனாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியிலும் மகராஜா படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்