நடிகர் கார்த்திக்கு 2022 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்தார். இரும்புத்திரை ஹீரோ உள்ளிட்ட படங்களை எடுத்த பி எஸ் மித்ரன் தான் இதனை இயக்கி இருந்தார். இதில் ராசி கண்ணா, லைலா, ரசிஜா விஜயன் உள்பட ஏராளமான நடித்து இருந்தனர். தந்தை மகன் என இரண்டு கெட்டப்புகளில் கார்த்தி வந்தார்.
தீபாவளியன்று இந்த திரைப்படத்துடன், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் வெளியானது. முதலில் பிரின்ஸ் திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சர்தார் பக்கம் ரசிகர்கள் திரும்பினர்.
இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக பலரும் கூறினர். இதனால் சர்தார் படத்திற்கு திரையரங்கு காட்சிகள் அதிகமாகப் பட்டன. படமும் நல்ல வசூல் பெற்றது. சொல்லப்போனால் எதிர்பார்த்ததை விட சர்தார் தயாரிப்பாளர் தரப்பிற்கு லாபத்தை கொடுத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு தனது 25வது திரைப்படம் ஆக ஜப்பான் படத்தின் நடித்த கார்த்தி. ராஜ்முருகன் இயக்கி இருந்த இந்தத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவருக்கு 26 ஆவது திரைப்படமாக வா வாத்தியாரே உருவாகியுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேபோல், 96 பட இயக்குனர் பிரேம்குமார் உடன் இணைந்து மெய்யழகன் என்னும் திரைப்படத்திலும் கார்த்தி நடித்து முடித்திருக்கிறார். இதில் அரவிந்த்சாமி ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தற்போது கார்த்தி சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





