தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ள அவர், இதுவரை நடித்த படங்களில் எண்ணிக்கை 50ஐ தொடவில்லை. இதற்கும் குழந்தை நட்சத்திரமாக லிட்டில் சூப்பர் ஸ்டாராக அவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த பெரிய வெற்றியை பெற்ற படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் சிம்பு எஸ்ஜே சூர்யா கருணாகரன் பிரேம்ஜி வாகை சந்திரசேகர் எஸ் ஏ சந்திரசேகர் பஞ்சு சுப்பு ஒய்ஜி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டைம் டிராவல் அடிப்படையில் உருவான இந்த படத்தில் முதலமைச்சராக கொலை செய்ய திட்டமிடும் அமைச்சர் ஒய்ஜி மகேந்திராவுக்கு போலீஸ் அதிகாரியாக வரும் எஸ்ஜே சூர்யா உதவி செய்கிறார். செத்து செத்து பிழைக்கும் கேரக்டரில் சிம்பு முதலமைச்சர் கொலை செய்வதை தடுப்பதுதான் படத்தின் கதை.
மாநாடு படத்துக்கு பிறகு பத்து தல வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்த சிம்பு, கடைசியாக நடித்த படம் தக்லைப். மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிம்பு வில்லனாக நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற 3ம் தேதி சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அந்த நாளில் சிம்பு அடுத்து நடிக்க உள்ள 3 படங்களில் அப்டேட் வெளியாக உள்ளது. இயக்குனர்கள் ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே 2 ஆண்டுகளாக சிம்பு படம் எதுவும் வெளிவராத நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மாநாடு படம் நாளை ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. மாநாடு படத்தையே 2ம் பாகமாக எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய மறந்துவிட்டார் சிம்பு. அப்படி ஒரு படத்தை சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்தால் இப்போது மாநாடு படமே ரி ரிலீஸ் செய்யப்படுகிறதே என்று புலம்புகின்றனர்.





