- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமேல் அந்த மாதிரி படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன்... எனக்கே போர் அடிச்சு போச்சு... திடீரென...

இனிமேல் அந்த மாதிரி படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன்… எனக்கே போர் அடிச்சு போச்சு… திடீரென சபதம் எடுத்த நடிகர் மணிகண்டன்…

- Advertisement -

தமிழ் திரையுலகில் தற்போது மிக முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மணிகண்டன். குறும்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், பிறகு வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதற்கு உதாரணமாக விக்ரம் வேதா திரைப்படத்தைக் கூறலாம்.

அதில் வசனகர்த்தாவாகவும் இருந்த அவர் காவலராகவும் நடித்திருப்பார். இதேபோல், காலா, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்கள் மணிகண்டனை கவனிக்க வைத்தன. ஜெய் பீம் திரைப்படத்தில் ராசா கண்ணு கதாபாத்திரத்தில் வாழ்ந்து பலரது மனதையும் வென்றார். இதனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகினார்.

- Advertisement -

இதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. நகைச்சுவை கலந்த குடும்ப படமாக எடுக்கப்பட்ட இது, வசூல்மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் வெளியானது. இதுவும் அவருக்கு சக்ஸஸ்ஃபுல்லாக அமைந்தது.

பின்னர் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாக, அதுவும் மணிகண்டனுக்கு ஹேக்டரிக் வெற்றியை கொடுத்தது. இதனால் தமிழ் திரையுலகம் கவனிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார் மணிகண்டன். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது,

- Advertisement -

மூன்று திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருந்தாலும், தொடர்ந்து மிடில் கிளாஸ் திரைப்படங்களிலேயே நடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என மூன்று திரைப்படங்களும் எனக்கு அப்படிதான் அமைந்தன. சொல்லப்போனால் இது குறித்து என்னிடம் பலரும் கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் எனக்காக இந்த ஒரு கதையை எழுதினேன் என்று கூறுபவரிடம் எதுவும் சொல்ல முடியாது.

அதேபோல் ஒரு வருடத்திற்கு ஒரு படம் என்று ஆகிவிட்டது. ஆனால் இனிவரும் காலங்கள் அப்படி இருக்காது. இந்த வருடத்தில் மூன்று படம் அடுத்த ஆண்டில் மூன்று படம் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறேன். இந்த திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமானதாக இருக்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்