அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் அவரது பயணம் தொடர்கிறது. அஜித் குமார் ரேசிங் கிளப் எனும் அவரது நிறுவனத்தில், சக கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்கள். அண்மையில் இந்த குழுவில், நரேன் கார்த்திகேயன் இடம் பெற்றார்.
இப்படி, அஜித் குமாரின் கார்பந்தயம் ஃபுல் சார்ஜுடன் சூப்பராக செல்கிறது. இதன் நடுவே தனது திரைப்படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜித்குமார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் அடுத்த ஆறு வருடங்களுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று கூறியிருந்தார்.
இதில் தனது முதல் திரைப்படம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் எனவும் அந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இப்படியான சூழலில் அவரது திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே தனுசும் அஜித்திடம் கதை கூறியிருந்தால் ஒருவேளை இந்த கூட்டணி இணைகிறதோ என்று கேள்வி எழுந்தது.
ஆனால் எதிர்பார்ப்புகளை எல்லாம் சற்று குறைக்கும் வகையிலேயே அடுத்த படத்தின் தகவல் உறுதியாகி இருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை, அஜித் குமாரை வைத்து குட் பேட் அக்லி இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான், ஏகே 64-ஐயும் இயக்க இருக்கிறார். இதனை அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் அவரே அறிவித்தார்.
குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அது அஜித் ரசிகர்களைத் தாண்டி பலருக்கும் திருப்திகரமான படமாக அமையவில்லை. இப்படியான சூழலில் தான் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. விரைவில் சூட்டிங் தொடங்கப்படும் நிலையில், அனிருத் இதற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் ஸ்ரீ லீலா நடிப்பதாக பலரும் ஏற்கனவே கூறியிருந்தார்கள். இந்த நிலையில் லப்பர் பந்து சுவாசிகாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக இயக்குனர் மிஷ்கின் படத்தில் நடிப்பதாகவும் அவர் அஜித்திற்கு வில்லனாக வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவல் அஜித் ரசிகர்களை தாண்டி பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





