- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் ஜோதிகா நடித்த மாஸ் ஹிட் படம் குஷி - 3 நாட்களில் வசூல்...

நடிகர் விஜய் ஜோதிகா நடித்த மாஸ் ஹிட் படம் குஷி – 3 நாட்களில் வசூல் நிலவரம் என்ன? வழக்கமா தளபதி படம் என்றாலே பட்டாசு கிளப்புமே?

- Advertisement -

நடிகர் விஜய் படங்கள் என்றாலே வசூலில் பட்டைய கிளப்பும் என்பதுதான் வழக்கம். அதே நேரத்தில் விமர்சன ரீதியாக அவரது தோல்வி படங்களான வாரிசு பீஸ்ட் லியோ தி கோட் படங்கள் கூட வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தோல்வி படத்திலும் லாபத்தில் ஜெயிக்கும் வல்லமை நடிகர் விஜய்க்கு உண்டு.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000ம் ஆண்டில் வெளியான படம் குஷி. நடிகர் விஜய் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த இந்த படத்தை இயக்குனர் எஸ்ஜே சூர்யா டைரக்ட் செய்திருந்தார். இளம் காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நிழல்கள் ரவி விவேக் மும்தாஜ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகின. டீன் எஜ் வயதினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக இது இருந்தது. மேலும் விஜய்க்கு இளம் வயது அதிகமாக பெற்றுத் தந்த படங்களில் குஷி படமும் முக்கியமானது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி குஷி படம் ரிலீஸனது. ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. எதிர்பார்த்ததை விட பல கோடி ரூபாய் லாபத்தையும் அள்ளியது. அதனால் குஷி படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்துதான் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த 3 நாட்களில் குஷி படம் மொத்தமே ரூ. 1.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை ரி ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படங்களில் குஷி படம்தான் மிக மிக குறைவான ஒரு வசூலை பெற்றிருக்கிறது. இதற்கு காரணம் விஜயின் அரசியல் பயணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பொதுவாக ரி ரிலீஸ் படங்கள் என்றாலே பிரபல நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். ஆனால் கில்லி சச்சின் அளவுக்கு குஷி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதற்கு காரணம் பலமுறை இந்த படத்தை டிவி சேனல்களில் பார்த்து ரசிகர்களுக்கு சலித்து விட்டதால் தியேட்டர்களுக்கு வராமல் தவிர்க்கலாம். அல்லது இட்லி கடை காந்தாரா சாப்டர் 1 போன்ற படங்களை பார்ப்பதற்காக குஷி படத்தை பார்க்காமல் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்