- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் வெற்றி தோல்வி இன்றைய நிலை என்ன? நடிகர் மணிகண்டன் கொடுத்த சூப்பர் விளக்கம் -...

சினிமாவில் வெற்றி தோல்வி இன்றைய நிலை என்ன? நடிகர் மணிகண்டன் கொடுத்த சூப்பர் விளக்கம் – ரொம்ப தெளிவா இருக்கீங்க ப்ரோ…

- Advertisement -

சினிமாவில் நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது ரொம்பவும் அபூர்வம். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டாலும், அந்த படம் வெளியாகும் சூழ்நிலையும் மிக முக்கியமாக இருக்கிறது. வேறு பெரிய படங்கள் வரும்போது நல்ல கதைகள் கொண்ட படங்கள், குறைவான தியேட்டர்களில் ரிலீஸாகி மக்கள் பார்வைக்கு செல்லாமலும் போவதுண்டு.

சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறிய பல நடிகர்கள் உண்டு. சமீபத்திய உதாரணங்களாக நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூரி யோகி பாபு மணிகண்டன் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மணிகண்டன் ஸ்கிரிப் ரைட்டராகவும் இருக்கிறார். மிமிக்ரி கலைஞராகவும் அசத்துகிறார்.

- Advertisement -

காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் சில காட்சிகளில் மணிகண்டன் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது ரஜினி மகனாக நடித்த காலா தான். அதன்பிறகு ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவரை கொண்டு சென்று, முன்னணி நடிகராக மாற்றி விட்டது.

இப்போது குடும்பஸ்தன் என்ற படம், நடிகர் மணிகண்டன் நடிப்பில் வருகிற 24ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிகண்டன், தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி குறித்து சில கருத்துகளை கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

நடிகர் மணிகண்டன் கூறியதாவது, தவறு செய்து அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் வாழ்க்கை. ஆனால் சினிமாவில் வெற்றி பெற்றால் தான் நிலைத்து நிற்க முடியும். முந்தைய காலகட்டத்தில் நான்கைந்து படங்களின் தோல்விக்கு பிறகு நீங்கள் வெற்றி பெற்றால் போதும்.

ஆனால் இப்போது அந்த கால இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தோல்வி படம் கொடுத்தால், அதிலிருந்து மீண்டு வர 5 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் உங்கள் ஐடியா எல்லாம் பழசாகிவிடும். அதனால் இப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது என்று மணிகண்டன் கூறியிருக்கிறார். இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்