தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். விடுதலை 2 படத்துக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் பிரமோ சூட்டிங் சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் நெல்சன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் பின்னணி கதையில் உருவாவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா சமுத்திரக்கனி உள்ளிட்ட சில முக்கிய கதாபாத்திரங்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு நடித்த பத்து தல வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றன. அதன்பிறகு நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து தக்லைஃப் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் நடிகர் சிம்பு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக மணிகண்டன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குட்நைட் குடும்பஸ்தன் லவ்வர் ஜெய்பீம் காலா போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மணிகண்டன்.
இப்போது இந்த படத்தில் மணிகண்டன் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த படத்தில் மணிகண்டன் ஒரு சின்ன ரோலில் தான் நடிக்கிறார் என்றும் சில காட்சிகள்தான் அவர் வருவார் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் அவருக்கு நல்ல முக்கியத்துவம் உள்ள கேரக்டர் தான் இயக்குனர் வெற்றிமாறன் தந்திருப்பார் என்றும் ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.





