- Advertisement -
Homeபொழுதுபோக்குகாக்கா முட்டை, கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் உடன் விஜய் சேதுபதி இணைந்த வெப் சீரிஸ்...

காக்கா முட்டை, கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் உடன் விஜய் சேதுபதி இணைந்த வெப் சீரிஸ் என்ன ஆச்சு தெரியுமா… போடு… இது செம மேட்டரா இருக்குதே…

- Advertisement -

காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். வறுமையின் பிடியில் தவிக்கும் இரண்டு சிறுவர்கள், பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அது அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா என்ற ஒன்லைனை மையமாக படுத்தி இந்த திரைப்படத்தை அவர் எடுத்திருந்தார்.

இந்த ஒன்லைனை கேட்கும் போது பலருக்கும் இப்படி ஒரு கதையை எடுக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் அதனை சாத்தியப்படுத்தி ரசிக்கும் வகையில் எடுத்து அசத்தியிருந்தார் மணிகண்டன். எந்த ஒரு இடத்திலும் சோகக் காட்சிகளை கொண்டு வராமல் கதை போன போக்கிலேயே ஜாலியாக சொல்லிவிட்டு நம்மைக் கவர்ந்திருந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. விஜய் சேதுபதி ரித்திகா சிங் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய அளவு பேசப்படவில்லை என்றாலும், மணிகண்டனை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கச் செய்தது.

இப்படியான சூழலில், தமிழ் சினிமாவுக்கே மகுடமாக சிறந்த ஒரு திரைப்படத்தை எடுத்தார் மணிகண்டன். அதுதான் கடைசி விவசாயி. கிராமத்து வாழ்வியலையும், மக்களின் யதார்த்தத்தையும் இதற்கு மேல் யாராலும் காட்ட முடியாது என சொல்லும் அளவுக்கு அந்த திரைப்படத்தை அவர் வடிவமைத்திருந்தார். அது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் முருகனுக்குமான உரையாடலையும் அந்த திரைப்படத்தின் மூலம் அவர் நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த மாயாண்டி தாத்தா, அதில் வாழ்ந்தார் என்றே குறிப்பிடலாம். இதேபோல் விஜய் சேதுபதியும், தனக்கு கொடுத்த கேரக்டரை பக்காவாக உள்வாங்கி நடித்திருந்தார். இப்படியான சூழலில் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் மீண்டும் இணைந்தனர். இந்த முறை இந்தக் கூட்டணி வெப் சீரிஸ்க்காக கை கோர்த்தது.

படத்திற்கு முத்து என்கிற காட்டான் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹாட் ஸ்டார் நிறுவனம் இதனைக் கைப்பற்றி இருந்ததாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதன் பிறகு எந்த ஒரு தகவலும் வெளியாகாத சூழலில் தற்போது அந்த சீரிஸ் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக பேசுகிறார்கள். கேரள மாநிலம் வாகமன் பகுதியில் சூட்டிங் நடந்து முடிந்திருக்கிறதாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சீரிஸை ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்