- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைஃப்க்கு முன்பு மணிரத்னம் வைத்த டைட்டில்... வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்த கமல்......

தக் லைஃப்க்கு முன்பு மணிரத்னம் வைத்த டைட்டில்… வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்த கமல்… துல்கர் சல்மான், ஜெயம் ரவிக்கு முன்பு கூட, இவர்கள்தான் நடிப்பதாக இருந்துச்சாம்…

- Advertisement -

கோலிவுட்டில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். எப்போதுமே ட்ரெண்ட் செட்டராக இருக்கும் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தளபதி என்னும் திரைப்படத்தையும், உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்னும் பெரும் காவியத்தையும் படைத்தார்.

இதில் 1987 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படம், இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இளையராஜா இசையில், பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு செல்லும் சிறுவன், இளைஞனாக அங்குள்ள அநியாயங்களை தட்டி கேட்டு, எப்படி மக்களின் நாயகனாக மாறுகிறாய் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருந்தார் மணிரத்னம்.

- Advertisement -

படத்தில் வேலு நாயக்கராக வாழ்ந்த கமலஹாசன், தேசிய விருதை தட்டிச் சென்றார். இன்றளவும் கமல்ஹாசனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் ஜோடி மீண்டும் இணைவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைத்தது.

எந்தவிதமான கதைக்களத்தை இவர்கள் தொடுவார்கள் என ரசிகர்கள் காத்திருக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் படத்திற்கு தக் லைப் என பெயர் வைத்துள்ள படக்குழு அதற்கான அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டது. அதில் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் கமல், கேங்ஸ்டர் என்று கூறி எதிரிகளை பொளந்து கட்டுகிறார். இந்த வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதிலிருந்து சில புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது முதலில் படத்திற்கு சக்திவேல் என பெயர் வைக்க தான் மணிரத்னம் முடிவு செய்தாராம். ஆனால் கமல்ஹாசன் அது வேண்டாம் என்று அடம் பிடித்து இருக்கிறார். இதே போல் துல்கர் சல்மான் கதாபாத்திரத்திற்கு பகத் பாசிலையும், ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு சிம்புவையும் தான் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்காமல் போக, இவர்கள் இருவரும் படத்தில் இணைந்துள்ளார்களாம். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கி 2025 ஆம் ஆண்டு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்