மணிரத்னம் – கமல்ஹாசன் – ஏ ஆர் ரகுமான் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி இருக்கிறது தக் லைஃப். ரெட் ஜெயன்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க, அவருக்கு வளர்ப்பு மகனாக அமர் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் சிம்பு. பலரும் சிம்புவுக்குத் தான் திரிஷா ஜோடி என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், கமலுக்கு அவர் இணையாக இருப்பதுபோல் காட்டப்பட்டது.
ஆனால் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திரிஷா, நீங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்றும் எதிர்பார்க்காதது பலவும் படத்தில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். முன்னோட்டத்தில் மிக முக்கியமாக கமல்ஹாசன் உடன் சிம்பு மோதுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.
கமல்ஹாசன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது போன்றும், அவருடைய இடத்தை சிம்பு அபகரிப்பது போன்றும் டிரைலரில் காட்டப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் சிம்பு இங்கு நான் தான் ரங்கராய சக்திவேல் என்று கூறும் வசனமும் ரீச் ஆனது. இப்படியான சூழலில் தக் லைப் திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
அதில், தக் லைப் திரைப்படத்தில் ஆக்சன் இருக்கிறது. ஆனால் இது ஒரு நல்ல எமோஷனல் ஸ்டோரியாக இருக்கும். படத்திற்கு தேவையான ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் நீங்கள் ஒரு அழகான எமோஷனல் சீன்களை இதில் பார்க்கலாம். அதுமட்டுமல்ல கருப்பு வெள்ளை காட்சிகளிலும், தக் லைப் படத்தில் ஒரு போர்ஷனே அமைந்திருக்கிறது.
கமல்ஹாசன் அவரது அமர்ஹே திரைப்படத்தின் கதையை கூறினார். அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து தான் நாங்கள் தக் லைப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரஜினியுடன் சரியான கதைக்களம் அமைந்தால் நிச்சயம் இயக்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தக் லைஃப் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.





