- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்ஐகே தோல்விக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு...

எல்ஐகே தோல்விக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – படத்தின் கதாநாயகி நயன்தாரா தானா?

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படம் 2012ம் ஆண்டில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா மற்றும் பார்த்திபன் ஆனந்தராஜ் ஆர்ஜே பாலாஜி ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இது காமெடி மற்றும் ஆக்சன் கலந்த காதல் படமாக இருந்தது.

- Advertisement -

நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்ஃபார் பிலிம்ஸ் மூலமாக தயாரித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கி சில படங்களை அவர்களே சொந்தமாக தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2018ம் ஆண்டில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2022ம் ஆண்டில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான முக்கோண காதல் கதையான காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சுமாரான வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் சரத்குமார் மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படம் ஜென்சி மத்தியில் பெரிய அளவில் கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது எல்ஐகே படத்தின் தோல்விக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்க விக்னேஷ் சிவன் தயாராகி வருகிறார். இந்த முறை நானும் ரவுடிதான் படம் போலவே காதல் காமெடி ஆக்சன் கலந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை அவர் இயக்க முடிவு செய்து அதற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிப்பாரா, அல்லது வேறு நாயகி நடிப்பாரா என்பது பிறகு தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்