நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ் ஹரீஷ் கல்யாண் நடிகைகள் சுவாசிகா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் காளி வெங்கட் டிஎஸ்கே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் 2வது படத்தை டைரக்ட் செய்யாமல் அந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இருந்து வருகிறார்.
லப்பர் பந்து படம் ஹிட் ஆனவுடன் நடிகர் தனுஷ், தமிழரசன் பச்சமுத்துவை அழைத்து தனக்காக ஒரு கதை ரெடி பண்ணச் சொன்னார். அவரும் ஸ்கிரிப்ட் தயார் செய்த நிலையில் ஏற்கனவே கமிட் ஆன படங்களை முடித்து விட்டு இந்த படத்தில் நடிப்பதாக தனுஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் ஷேர் பிராப்பிட் அதாவது லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் நடிகர் தனுஷூக்கு சம்பளம் என்ற அடிப்படையிலும் இந்த படம் உருவாக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இப்போது திடீரென நடிகர் தனுஷ், எனக்கு 65 கோடி ரூபாய் சம்பளம் தந்தால் இந்த படத்தில் நடிக்கிறேன், இல்லை என்றால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இதே கதையை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் அல்லது தனது சொந்த வுண்டர்ஃபார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அப்படி தயாரிக்க வேண்டும் என்றால் டான் பிக்சர்ஸ் நிறுவனம் என்ஓசி தர வேண்டும். ஆனால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என்று டான் பிக்சர்ஸ் நிறுவனம் சொல்லி விட்டது. இந்த விவகாரத்தில் இப்போது இந்த மாதம் மதுரையில் துவங்க வேண்டிய இந்த படத்தின் படப்பிடிப்பு அப்படியே தடைபட்டு நின்றுள்ளது.
லப்பர் பந்து போன்ற ஒரு நல்ல யதார்த்தமான படத்தை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. ஆனால் அவர் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் இப்போது தவித்து வருகிறார். இதற்கிடையே இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டை ஒரு இந்தி படத்துக்கு நடிகர் தனுஷ் கொடுத்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.





