- Advertisement -
Homeபொழுதுபோக்குஓவராக டார்ச்சர் செய்த பிரபல நடிகையின் தம்பி - 70 சதவீத படப்பிடிப்புக்கு பிறகு ஹீரோவை...

ஓவராக டார்ச்சர் செய்த பிரபல நடிகையின் தம்பி – 70 சதவீத படப்பிடிப்புக்கு பிறகு ஹீரோவை மாற்றிய துணிச்சலான டைரக்டர்!

- Advertisement -

ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா, ஒரு படத்தில் நடித்து நம் திறமையை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்து விட மாட்டோமா என்று எத்தனையோ இளைஞர்கள் வாய்ப்புக்காக தவம் இருக்கின்றனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை துச்சமாக கருதும் மனநிலையில் இன்றைய சில இளம் நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் 5 இளைஞர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் 1990களில் இருந்த தேவயானியின் சொந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாய்ஸ் படத்துக்கு பிறகு பல படங்களில் நகுல் ஹீரோவாக நடித்தார். காதலில் விழுந்தேன் மாசிலாமணி தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் வல்லினம் நான் ராஜாவாகப் போகிறேன் பிரம்மா டாட் காம் கந்தகோட்டை உள்ளிட்ட படங்களில் நகுல் நடித்திருக்கிறார். ஆனால் எந்த படமும் பெரிய ஹிட் கொடுத்தது இல்லை.

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நடிகர் நகுல் டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போது படக்குழுவுக்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் பல விதங்களில் நகுல் இடையூறு செய்திருக்கிறார். குறிப்பாக இயக்குனருடன் படப்பிடிப்பில் ஒத்துழைப்பாக செயல்படாமல் அவர் பல விதங்களில் டார்ச்சர் செய்திருக்கிறார்.

- Advertisement -

பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர் பாலாஜி, ஒரு கட்டத்தில் நடிகர் நகுலிடம் நீங்கள் கிளம்புங்கள், இந்த படத்தில் நீங்கள் நடிக்கவே வேண்டாம் என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்த நிலையில் இப்படி ஒரு துணிச்சலான முடிவை அந்த இயக்குனர் எடுத்திருக்கிறார்.

இப்போது நடிகர் நகுல் நடித்த கேரக்டரில் படத்தில் ஹீரோவாக டிவி நடிகர் சித்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா நடித்து வருகிறார். வருகிற 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகை தேவயானி பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் அவரது தம்பி நடிகர் நகுல் கிடைத்த வாய்ப்புகளை அவரே தவற விடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்