- Advertisement -
Homeபொழுதுபோக்குடிமாண்டி காலனி 2 படம் வெற்றிக்கு பிறகு நடிகர் அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் -...

டிமாண்டி காலனி 2 படம் வெற்றிக்கு பிறகு நடிகர் அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் – கொம்பன் பட இயக்குனருடன் புதிய கூட்டணியா? அட்ரா சக்க என ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. தொடர்ந்து மௌனகுரு டிமாண்டி காலனி ஆறாவது சினம் இரவுக்கு ஆயிரம் கண்கள் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் தகராறு பிருந்தாவனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அருள்நிதி நல்ல நடிகராக வரவேற்பு பெற்றார்.

அருள்நிதியை பொருத்த வரை யதார்த்தமான நடிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக டிமாண்டி காலனி படத்தின் 2 பாகங்களிலும் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதே போல் தகராறு, வம்சம், மௌனகுரு போன்ற படங்களிலும் அவரது காதல், காமெடி, ஆக்சன் நடிப்பு ரசிகர்கள் ரசிக்கும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமான்டி காலனி இரண்டாம் பாகம். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து டிமாண்டி காலனி 3 டிமாண்டி காலனி 4 ஆகிய படங்கள் தொடர்ந்து உருவாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் அருள்நிதி பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படம் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்திலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்கவும் கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் குட்டிப்புலி, மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன், கொம்பன் என பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் முத்தையா. இவரை கொம்பன் முத்தையா என்றே தமிழ் சினிமாவில் அழைக்கின்றனர். கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படம் பெரிய வெற்றியை பெற்றதால், அந்த படத்தின் பெயரே அவரது பெயருக்கு முன் அடைமொழியாக மாறிவிட்டது.

கொம்பன் முத்தையா இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார். முதல் முறையாக முத்தையா, அருள்நிதி கூட்டணியில் புதிதாக உருவாகும் இந்த படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் ஒரு ட்ராவல் படமாகவும் இருக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்