நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக வெளியாகிறது.
மேலும், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் ரிலீசாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படம் ரிலீசாகும் இந்த நேரத்தில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி, சூர்யா நடித்த கங்குவா ஆகிய படங்கள் ப்ளீஸ் ஆகவில்லை. ஏனெனில் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. கங்குவா படமும் விஜய்க்கு போட்டியாக களத்தில் இருக்காது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து நடிகர் அஜித்குமார் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படமும், அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்குவா படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் இல்லை. சிஜி, விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் நிறைய இருப்பதால் அதற்குப் பிறகுதான் கங்குவா ரிலீஸ் என்றும் ஏற்கனவே படக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு போட்டியாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
ராணுவ கதை களத்தில் உருவான இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த அயலான் படம் மிகப்பெரிய தோல்வி படமாகி விட்டதால், அமரன் படத்தை தான் அவர் மலையாக நம்பி இருக்கிறார். இப்போது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி விட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் தனது 69 படத்தையும் முடித்துவிட்டு, 2025 முதல் அரசியலில் மட்டுமே முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் விஜய் விட்டுச் செல்லும் இடத்தில், அடுத்த தளபதியாக சிவகார்த்திகேயன் தான் இருப்பார் என்ற ஒரு டாபிக் கோலிவுட்டில் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் தளபதி படத்துடன், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மோதுவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





