நடிகர் அஜித்குமாருக்கு 50-வது திரைப்படமாக அமைந்தது தான் மங்காத்தா. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்வி திரைப்படங்களையே அவர் கொடுத்து வந்தார். ஆஞ்சநேயா, ஆழ்வார், பரமசிவன், ஜனா, ஏகன், அசல் என தொடர் தோல்விகள் அவரை சுற்றி சுற்றி வந்தது.
இந்த நேரத்தில் அஜித்திற்கு திருப்புமுனையாக பில்லா திரைப்படம் மட்டும் தான் அமைந்தது. அந்தத் திரைப்படம் குறித்த வெற்றியால் அடுத்த கட்டத்திற்கு சென்றார் அஜித் குமார். குறிப்பாக கோட் சூட் அணிந்து ஒரு ராயலான ஹீரோவை போல் அவர் வலம் வந்தார். இந்த சமயத்தில் தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்து அவர் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.
நீண்ட கால நண்பர்கள், ஒரு பெரும் பணத்தை கொள்ளை அடிக்க நினைத்து, அதற்காக சரியாக திட்டம் தீட்டி அனைவரையும் கவிழ்ப்பதே மங்காத்தா திரைப்படத்தின் ஒற்றைக் கதை கரு. படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஒரே நேர் கோட்டில் பயணிக்க, கிளைமாக்ஸில் சஸ்பென்சை ரிவில் செய்து கெத்து காட்டி இருந்தார் வெங்கட் பிரபு.
இதன் காரணமாக யாருமே எதிர்பார்க்காத வெற்றியை மங்காத்தா பெற்றது. இந்த நிலையில் தான் மங்காத்தா திரைப்படத்திற்கு விஜய்யின் கோட் படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படமாக விஜய் இதில் நடித்து வருகிறார்.
டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட வருகிறது. இதில் பிரசாந்த் பிரபுதேவா மோகன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜய் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதன் சூட்டிங் தாய்லாந்து, துருக்கி, புதுச்சேரி திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தற்போது ரஷ்யாவில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படமும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் தான் வெளியானது. தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் வெங்கட் பிரபுவின் படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறி வைத்திருப்பதால் ரசிகர்கள் செண்டிமெண்டாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





