- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா சம்பளத்துக்கு ஆப்பு வைத்த அன்னபூரணி, மளமள என சரிந்த தியேட்டர் ஷேர் - உஷாரான...

நயன்தாரா சம்பளத்துக்கு ஆப்பு வைத்த அன்னபூரணி, மளமள என சரிந்த தியேட்டர் ஷேர் – உஷாரான மண்ணாங்கட்டி பட தயாரிப்பாளர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என நடிகை நயன்தாரா அழைக்கப்படுகிறார். தமிழில் மட்டுமின்றி, சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டிலும் காலடி பதித்துவிட்டார் நயன்தாரா. தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகளை நயன்தாரா எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடித்துவரும் இப்போதைய முன்னணி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா தான். முதலில் 10 கோடி ரூபாய் வாங்கியவர் இப்போது ஜவான் படத்துக்கு ரூ. 12 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்போது அவர் நடித்துவரும் மண்ணாங்கட்டி படத்துக்கு கொடைக்கானல் போன்ற தூரமான ஊர்களுக்கு வர முடியாது. சென்னையில் செட் போடுங்கள் வந்து நடிக்கிறேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த படம்தான் அன்னபூரணி. இது அவரது 75 வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் ஒரு அதீத எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. இந்த படத்தில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்துக்கு பிறகு, நடிகர் ஜெய் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை போலவே, அன்னபூரணி படத்திலும், நயன்தாராவின் தந்தை கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான ஓரிரு தினங்களில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அன்னபூரணி மற்றும் அதே வாரத்தில் வெளியாகி இருந்த நாடு, பாா்க்கிங் உள்ளிட்ட படங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

- Advertisement -

இந்நிலையில் அன்னபூரணி படம் தியேட்டர்களில் ஓடிய வகையில் தயாரிப்பாளருக்கு தியேட்டர் ஷேர் ஆக ரூ. 85 லட்சம் கிடைத்துள்ளது. இது படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 29ம் தேதி வெளியாகும் அன்னபூரணி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மண்ணாங்கட்டி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்துவருகிறார் நயன்தாரா. அன்னபூரணி படத்துக்கு கிடைத்த முடிவை பார்த்து சுதாரித்துக்கொண்ட மண்ணாங்கட்டி படத்தை தயாரிக்கும் படத்தயாரிப்பு நிறுவனம், இதுவரை என்ன பட்ஜெட் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்க வேண்டும், எவ்வளவு பட்ஜெட் என புள்ளிவிவரம் சேகரித்து, படத்துக்கான பட்ஜெட் செலவை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதில், நயன்தாராவின் சம்பளமும் குறைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்