- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தோட டைட்டில் மாதிரியே படத்தோட நெலமையும் ஆயிடுச்சே… புலம்பும் படக்குழுவினர் - நயன்தாரா நடிச்ச படத்துக்கே...

படத்தோட டைட்டில் மாதிரியே படத்தோட நெலமையும் ஆயிடுச்சே… புலம்பும் படக்குழுவினர் – நயன்தாரா நடிச்ச படத்துக்கே இந்த கதியா என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் 2 நடிகைகள் யாரென்றால் அது நயன்தாரா மற்றும் திரிஷா இருவர் மட்டும்தான். இதில் நயன்தாராவுக்கு திருமணமாகி வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆனால் திரிஷா இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா வளர்ந்து வந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக மட்டுமே நடித்தார். ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சரத்குமார் தனுஷ் சூர்யா ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்றவர்களது படங்களில் அவர்களுடன் ஜோடியாக நடித்து டூயட் பாடினார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர்கள் சிம்பு பிரபுதேவா ஆகியோருடன் காதல் வசப்பட்டு பின் அவர்களை பிரிந்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளாக அவர் காதலித்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டில்தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நயன்தாராவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை.

ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்தது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக இமைக்கா நொடிகள் கோலமாவு கோகிலா அறம் நெற்றிக்கண் ஓ2 டோரா ஐரா போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன. அதனால் தனது சம்பளத்தை கணிசமாக நயன்தாரா உயர்த்தினார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளமாக கேட்டார். ஆனால் சமீப காலமாக நயன்தாராவுக்கு எந்த வெற்றிப் படமும் இல்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி படம் ரிலீஸ்க்கு தயாரான நிலையில், அந்த படம் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் படக்குழு தடுமாற்றத்தில் உள்ளது. ஏனெனில் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் ஆடியோ என எதுவும் வியாபாரம் ஆகவில்லை. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என எந்த பிஸினஸ்சும் நடக்காமல் அந்த படம் அப்படியே உள்ளது. மண்ணாங்கட்டி என்று வெச்ச டைட்டில் இப்ப நிலமை அதே மாதிரி இருக்கே என படக்குழுவினர் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்