- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் உருவாகும் படம், டைரக்டர் யார் தெரியுமா? - வெளியான லேட்டஸ்ட்...

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் படம், டைரக்டர் யார் தெரியுமா? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் பிரபுதேவா நடன கலைஞராக இருந்து பிறகு நடிகராக மாறியவர். ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த படம் காதலன். இந்த படத்தில் பிரபுதேவாவின் நண்பராக படம் முழுவதும் இணைந்து நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அதே போல் மனதை திருடிவிட்டாய் படத்திலும் பிரபுதேவா – வடிவேலு காமெடி வேற லெவலில் செம அலப்பரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபுதேவாவுக்கு நடிகர் வடிவேல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர் டைரக்ட் செய்த போக்கிரி படத்திலும் வில்லு படத்திலும் வடிவேலுவை காமெடி ரோலில் நடிக்கச் செய்திருந்தார். பொதுநிகழ்ச்சிகளில் கூட வடிவேலுவை பார்த்துவிட்டால் பிரபுதேவா, அவரிடம் சிறுவர்களிடம் விளையாடுவது போல ஓடிப்பிடித்து இடுப்பை பிடித்து கிள்ளி விளையாடுவார்.

- Advertisement -

காதலன் படத்தில், நக்மாவை விரும்பும் பிரபுதேவாவுக்கு பல விதங்களில் வடிவேலு உதவியாக இருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற பேட்டராப் பாடல் பெரிய அளவில் அப்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிரபுதேவாவுக்கு இணையாக பல காட்சிகளில் வடிவேலு நடனமாடி ரசிகர்களை அசத்தியிருப்பார்.

அதே போல் மனதை திருடி விட்டாய் படத்தில் கல்லூரி மாணவர்களாக பிரபுதேவா வடிவேலு நடித்திருப்பர். இதில் நடிகர் விவேக்கும் நடித்திருப்பார். சிங் இன் த ரெயின் என்ற பாடல் காட்சி இன்றளவும் வடிவேலு காமெடியில் முக்கியமானதாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதுபோன்ற காமெடி காட்சிகள் வடிவேலுவுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தன.

- Advertisement -

மிஸ்டர் ரோமியோ எங்கள் அண்ணா படங்களிலும் பிரபுதேவா வடிவேலு காமெடி கூட்டணி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர்கள் பிரபுதேவா வடிவேலு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஷாம் ஆண்டன் இயக்குகிறார்.

இவர் ஜீவி பிரகாஷ்குமார் நிக்கி கல்யாணி நடித்த டார்லிங், அதர்வா போலீஸ் கேரக்டரில் நடித்த 100 ஜீவி பிரகாஷ்குமார் நடித்த எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கியவர். இந்த படத்தை துபாய் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்