தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்த அவர், தற்போது லியோ திரைப்படத்தின் மூலம் ஐந்தாவது வெற்றியையும் பதிவு செய்து இருக்கிறார்.
அவரது முதல் திரைப்படம் மாநகரம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும், லோகேஷ் கனகராஜின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது கைதி திரைப்படத்தில்தான். ஒரே இரவில் நடக்கும் கதையாக கைதியை எடுத்து, தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத கதைக்களத்தை ரசிகர்களுக்கு அவர் கொடுத்தார்.
அதிலேயே ரெட்ரோ சாங்க், ஹீரோ பிரியாணி சாப்பிடுவது, கிளைமாக்ஸ் காட்சி எனத் தனக்கே உண்டான டெம்ப்ளேட்களை பொருத்திய அவர், அதற்கு நல்ல வரவேற்பும் இருந்ததால் பின்னால் வந்த திரைப்படங்களிலும் அதனை பயன்படுத்தி வெற்றி கண்டார். மாஸ்டருக்கு பிறகு அவர் எடுத்த விக்ரம் திரைப்படம், இந்தப் பாணியிலேயே அமைந்தது.
கைதி படத்தின் சில விஷயங்களை விக்ரமில் பொருத்திய லோகேஷ் கனகராஜ், எல் சி யு கான்செப்ட்டை கொண்டு வந்தார். தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு அப்படியான திரைப்படங்கள் வந்தாலும், லோகேஷ் கனகராஜின் யுத்தியை பலரும் கொண்டாடினர். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்தது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது.
இறுதிக்காட்சியில் கடைசி பத்து நிமிடங்களில் சூர்யா பேசுவது, அந்தக் கூட்டத்திலேயே கமல்ஹாசன் இருப்பது என கிளாசிக்காக இருந்ததால் விக்ரமை பலரும் கொண்டாடினர். தற்போது லியோ திரைப்படத்திலும் என் சி யூ கான்செப்ட்டை லோகேஷ் வைத்திருக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எல் சி யு பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, எல் சி யு வில் மிகப்பெரிய வில்லனே லியோதான். எந்த ஒரு வில்லன் கும்பலும் அவனை நெருங்க முடியாத வகையில் காண கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் அதற்கு கொடுத்திருந்தார். இதன் காரணமாகவே எமோஷனலாக லியோவை வீழ்த்த முடியும் என்பதால், நரபலி கான்செப்ட் கொண்டுவரப்பட்டது. லியோ எப்படிப்பட்டவன் என்பதை கூறுவதற்கு தான், மன்சூர் அலிகான் ஒரு கதையே கூறியதற்கு இப்படியா என்ற வசனத்தை பேசுவார். இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





