- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவு செஞ்சி சினிமா பக்கம் வந்துடாதீங்க- உதயநிதியை கெஞ்சி கேட்டுக்கொண்ட விஜய் ஆண்டனி! ஏன் அப்படி...

தயவு செஞ்சி சினிமா பக்கம் வந்துடாதீங்க- உதயநிதியை கெஞ்சி கேட்டுக்கொண்ட விஜய் ஆண்டனி! ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் “குருவி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின் தமிழ் சினிமாவின் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தும் வாங்கி வெளியிட்டும் வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வந்தார். அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர்களை மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் பல தயாரிப்பாளர்கள்தான் உதயநிதி ஸ்டாலினை தேடி செல்கிறார்கள் என்ற உண்மை பின்னாளில் தெரிய வந்தது.

இந்த சமயத்தில் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். அதனை தொடர்ந்து கடந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றார். ஆதலால் “மாமன்னன்” திரைப்படம்தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில் “மாமன்னன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். அதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இது உதயநிதியின் கடைசி திரைப்படம் என கூறுகிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை.

எனினும் அரசியல் காரணங்களுக்காக அவர் போகிறார் என்னும்போது அவரை வாழ்த்தி அனுப்புவதற்கான சூழ்நிலை. உதயநிதியை பலரும் சினிமாவை விட்டு போக வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் நான் அவரை சந்தோஷமாக வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறேன். நீங்கள் அங்கேயே இருங்கள்” என கூறி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சற்று முன்