- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸ் நடித்த கல்கி படத்துல, இப்படி ஒரு வில்லங்கம் இருப்பது ரசிகர்களுக்கு தெரியுமா? - ஆனா...

பிரபாஸ் நடித்த கல்கி படத்துல, இப்படி ஒரு வில்லங்கம் இருப்பது ரசிகர்களுக்கு தெரியுமா? – ஆனா இந்த விஷயத்தை நம்மூர்ல மட்டும் செஞ்சிடாதீங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவை இப்போது ரசிகர்கள் டிஜிட்டல் முறையில் கண்டு ரசிக்கின்றனர். தியேட்டர்களில் டால்பின் சவுண்ட் எபெக்ட்டில், டிடிஎஸ் துல்லியமான திரையில், குஷன் பெட்டில் கால்களை நீட்டிப் படுத்தபடி படம் பார்க்கும் வசதிகள் பெங்களூரு, கோவை, சென்னை போன்ற நகரங்களில் வந்துவிட்டன. நவீனப்படுத்தப்பட்ட வசதிகளை தியேட்டர்களில் அப்டேட் செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன் டெண்ட் கொட்டகையில், மணலை கூட்டி உயர்த்தி வைத்து, அந்த உயரத்தில் அமர்ந்து படம் பார்த்த பசுமையான நினைவுகள் இப்போதும் பலருக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் இருந்த சினிமா கொட்டகைகள், இன்று மல்டி பிளஸ் தியேட்டர்களாக, மால் தியேட்டர்களாக டிஜிட்டலைஸ் வளர்ச்சியில் நாகரிகமடைந்திருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு போது திரையில் மல்லிகைப்பூவை காட்டினால், ரசிகர்களுக்கும் மல்லிகை பூ வாசம் வரும். மீன் மார்க்கெட்டை காட்டினால், மீன் நாற்றம் வரும். மதுபானம் குடிப்பது போன்ற காட்சியில், தியேட்டருக்குள் மதுவாசனை கும்மென்று வீசும். இதுபோன்றும் நடந்திருக்கிறது.

இதற்கு காரணம், தியேட்டரில் அந்த படம் பார்க்கும் போது தியேட்டர் வெளிப்பகுதியில் இருந்து, திரையில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப அந்த திரவிய வாசனையை, தியேட்டருக்குள் காற்று போல தியேட்டர் ஊழியர்கள் பரவச் செய்வர். அப்போது பஜ்ஜி, போண்டா வாசனை வரும். எலுமிச்சை மணம் வரும். திரையில் தோன்றும் காட்சிக்கேற்ப தியேட்டருக்குள் வாசனை பரவும்.

ஆனால் இப்படி அடுத்தடுத்த வாசனை வரும்போது அதன் நெடி தாங்க முடியாமல், வாந்தி எடுத்த ரசிகர்கள் பலர் உண்டு. மயக்கமடைந்த ரசிகர்களும் பலர் உண்டு. அதன்பிறகு இப்படி ஒரு விபரீத விஷயத்தை செய்ய வேண்டாம் என தியேட்டர் நிர்வாகங்களே உஷாராகி, இதுபோன்ற ஒரு நுட்பத்தை தியேட்டர் நிர்வாகிகள் கைவிட்டு விட்டன.

வருகிற 27ம் தேதி, பிரபாஸ் நடித்த கல்கி 2898 படம் உலகம் முழுவதும் 13 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஜப்பான், ஸ்பெயின், கொரியன் உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதில், கொரியன் நாட்டில் இதுபோன்ற வாசனை திரவியம் ரசிகர்களுக்கு பரவ விடும் நவீன வசதிகள் கொண்ட தியேட்டர்களில்தான், கல்கி படம் ரிலீஸ் ஆகிறது. அதனால் படம் பார்க்கும் ரசிகர்கள், படத்தின் வரும் வாசனை பொருட்களுக்கு ஏற்ப தாக்குபிடிப்பார்களா என்பதுதான் இப்போதைய மெகா கேள்வியாக எழுந்துள்ளது.

சற்று முன்