- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... லியோ பிளாஷ்பேக்ல உண்மை இல்லையா... அதிர்ச்சி கொடுத்த பிரபலம்... உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையாடா சாமி...

என்னது… லியோ பிளாஷ்பேக்ல உண்மை இல்லையா… அதிர்ச்சி கொடுத்த பிரபலம்… உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையாடா சாமி…

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித்குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, கௌதம் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

லியோ படத்திற்கு கிடைத்துள்ள நல்ல விமர்சனத்தால் அதன் முதல் நாள் வசூல் யாரும் எதிர்பாராத வகையில் சாதனை படைத்தது. முதல் நாளில் மட்டும் அந்த திரைப்படம் 148 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது நாள் லியோ திரைப்படத்தின் வசூல் பாதியாக குறைந்ததாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதாலும், படத்தின் இரண்டாம் பாதி மிகவும் சுமாராக இருப்பதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மூன்றாவது நாள் வசூல் முதல் நாள் வசூலை விட முந்தி இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களைப் பொறுத்தவரையில் லியோ படத்தின் முதல் பாதி கச்சிதமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் பாதியில் கழுதை புலி வரும் காட்சி, பிறகு காபி ஷாப் சண்டை, மார்க்கெட் சண்டை காட்சி, போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உடன் விஜய் சண்டையிடுவது, கைதி படம் நெப்போலியன் அறிமுகமாகும் காட்சி, பேடஸ் பாடல், பிறகு இடைவேளை என அனைத்து காட்சிகளும் சூப்பராக இருந்ததாக விமர்சித்தனர். இரண்டாம் பாதியில் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், லியோ தாஸுக்கான பிளாஸ்டிக் காட்சி ஒட்டுமொத்த படத்தையும் கவிழ்த்து விட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதுவும் அந்த நரபலி பிறகு மடோனா செபஸ்டின் அறிமுகம் என எதுவுமே மனதிற்கு ஒட்டாமல் சம்பந்தமே இல்லாமல் வேறொரு திரைப்படத்தில் நுழைந்து இருப்பதாகவும் கருத்துகள் வெளிவந்தன. கிளைமாக்ஸ் காட்சி அதன் பிறகு நன்றாக இருந்தாலும், பிளாஷ்பேக் கொடுத்த மட்டமான காட்சியமைப்பால் படம் சுமாராகவே இருந்ததாக விமர்சனங்கள் இருந்தன. இந்த நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆன மனோஜ் பரமஹம்சா, பிளாஷ்பேக் காட்சி குறித்து பேசி இருக்கிறார்.

அதில், இந்த படத்திற்கு ஃப்ளாஷ்பேக் காட்சியே தேவையில்லை. லோகேஷ் கனகராஜும் அதனை வைப்பதற்கான ஐடியாவிலும் இல்லை. மன்சூர் அலிகான் பிளாஷ்பேக் காட்சியை ஓபன் செய்தது பொய்யாக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியை வைரலாக்கி வரும் விஜய் ரசிகர்கள், ஒருவேளை மனோஜ் கூறியது உண்மைதான் என்று நினைத்து, லோகேஷ் கனகராஜ் புகழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்