- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவரை கண்ட்ரோல் பண்ண, இதை செஞ்சா போதும் - மன்சூர் அலிகான் போட்டுக்கொடுத்த புது ரூட்டு

இவரை கண்ட்ரோல் பண்ண, இதை செஞ்சா போதும் – மன்சூர் அலிகான் போட்டுக்கொடுத்த புது ரூட்டு

- Advertisement -

சமீபத்தில், மன்சூர் அலிகான் தயாரிக்கும் படம் சரக்கு, இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் இசை வௌியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு கூல் சுரேஷ் மாலை போட்ட நிகழ்வு, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு கூல் சுரேஷ் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டார்.

இந்த விழாவில், பயில்வான் ரங்கநாதனும் கலந்துக்கொண்டு பேசினார். இவர் பொது வெளியில், மேடையில் பேசுகிறார் என்றாலே, ஏதாவது வில்லங்கத்தை இழுத்து விடுவார் என, தமிழ் திரையுலகினர் நினைப்பது வழக்கமாக இருக்கிறது. ஏனெனில், யூடியூப் சேனல்களில் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர், நடிகைககளை பற்றி, அந்தரங்கமாக பேசி வருபவர் இவர். இவரது லிஸ்ட்டில் இல்லாத திரை நட்சத்திரங்களே இல்லை என்றும் சொல்லலாம்

- Advertisement -

சமீபத்தில் திரைத்துறையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதுபற்றி யாருமே யோசிக்காத வகையில், பிரச்னைகளை முன்னிறுத்தி பேசுபவர் பயில்வான் ரங்கநாதன். ஆனால், இவரும் ஒரு சினிமா நடிகர்தான். இவரது கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பார்த்து, பயில்வான் என பெயர் வைத்ததே எம்ஜிஆர் தான் என்றும் சொல்லப்படுவது உண்டு. பல படங்களில், காமெடி காட்சிகளில் நடித்த பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளராகவும் இருக்கிறார்.

அதனால், சரக்கு பட இசை வௌியீட்டு விழாவில் மேடையேறி பேச, பயில்வான் ரங்கநாதனை, மன்சூர் அலிகான் அனுமதித்தார். ஆனால், மேடையில் பேசிய ரங்கநாதன், மன்சூர் அலிகான் குறித்து எந்த குறைகளையும் சொல்லவில்லை. அவர் பேசிய மற்ற சில விஷயங்கள், அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் அங்கு இருந்த யாரையும், வழக்கமான தன் பாணியில் விமர்சிக்காமல் அடக்கி வாசித்தார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

இதையடுத்து, தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அந்த படம் பற்றியோ, அதில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றியோ வாய் திறந்து பயில்வான் ரங்கநாதன் எதுவுமே பேச மாட்டார் என்பதை இதன்மூலம் தமிழ் சினிமா சார்ந்த பலரும் புரிந்துகொண்டுள்ளனர். அதனால், இவரது வாயை மூட வேண்டும் என்றால், படத்தில் ஏதேனும் ஓரிரு காட்சிகளில் நடிக்க வைத்து விட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மன்சூர் அலிகான் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மதுவின் தீமைகளை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தான் எடுக்கப்படுகிறது. சரக்கு என பெயர் வைத்திருப்பதால், படம் முழுக்க டாஸ்மாக் கடை வாசனையாக இருக்கும் என ரசிகர்கள் தவறாக நினைத்து விட வேண்டாம் என்பதும், இந்த விழாவில் ஒரு முக்கிய தகவலாக தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

சற்று முன்