- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ் விக்ரம் திரைப்படத்திற்காக முதல்முறையாக இப்படி ஒரு செயலில் இறங்கும் மாரி செல்வராஜ்... நிச்சயமாக, இதை...

துருவ் விக்ரம் திரைப்படத்திற்காக முதல்முறையாக இப்படி ஒரு செயலில் இறங்கும் மாரி செல்வராஜ்… நிச்சயமாக, இதை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க…

- Advertisement -

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் திரைப்படமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, அங்கிருந்து கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். இப்படி மூன்றே மூன்று திரைப்படங்களை எடுத்து கோலிவுட்டில் உச்ச இயக்குனர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்திருக்கிறார்.

 

- Advertisement -

கர்ணன் திரைப்படத்தை முடித்த பிறகு அவர், விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் இணைவதாக இருந்தது. இயக்குனர் பா ரஞ்சித் இதனை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில், தனது கடைசி படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று மாரி செல்வராஜிடம் கூறிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

 

- Advertisement -

இதற்காக துருவ் படத்தை ஒத்திவைத்துவிட்டு மாமன்னன் திரைப்படத்தை அவர் எடுக்கச் சென்றார். இதன் பிறகு கிடைத்த சிறிய இடைவேளையில், வாழை என்னும் திரைப்படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கினார். இதனை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தயாரித்தது. ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது.

 

முதலில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாகதான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முடிவு மாற்றப்பட்டு, முதலில் தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்திற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

டைட்டிலுக்கு கீழே காளமாடன் என்றும் டேக் வைக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரி நடிக்கிறார். இவர்களுடன் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள், கலையரசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, தனது உடல் எடையை அதிகரிப்பதற்கான முயற்சியில் துருவ் ஈடுபட்டிருக்கிறார். மேலும் முதல்முறையாக பைசன் திரைப்படத்திற்காக வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த இருக்கிறாராம் மாரி செல்வராஜ். ஜப்பான் அல்லது ஆஸ்திரேலியாவில் இதன் படப்பிடிப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. எப்போதும் மண் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர் திடீரென வெளிநாட்டில் சூட்டிங் நடத்த இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்