பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை படங்களை அவர் இயக்கினார். கடைசியாக அவரது இயக்கத்தில் பைசன் காளமாடன் படம் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே சமூக உரிமைகள் குறித்து பேசும் படங்களாக இருக்கின்றன என்ற விமர்சனம் இருந்தாலும் ரசிகர்கள் அதை வெற்றிப் படமாக்கி விடுகின்றனர். அந்த வகையில் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய படம்தான் வாழை. கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிப்பில் பர்ஸ்ட் காஃபி அடிப்படையில் வாழை 2 படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகிறார். வாழை படத்தில் நடித்த சிறுவன் பொன்வேல் இந்த படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார்.
மேலும் படத்தில் நாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இன்னொரு நாயகியாக இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். டாக்டர் டான் கேப்டன் மில்லர் எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து மேட் இன் கொரியா படத்தில் பிரியங்கா மோகன் பெரிய அளவில் கவனம் பெற்றார்.
அதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் வாழை 2 படத்தில் பிரியங்கா மோகன் 2 நாயகிகளில் ஒருவராக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். சமீபத்தில் அவரது கம்போஸிங்கில் பாடல்களை கேட்டு மாரி செல்வராஜ் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
வாழை படத்தில் வாழை தார்களை கூலிக்கு வெட்டி எடுத்துச் செல்லும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் அந்த படம் உருவாகி இருந்தது. இப்போது வாழை 2 படத்தில் கதிர் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் அந்த படத்தின் தொடர்ச்சியா, அல்லது வேறு கதைக்களத்தில் உருவாகிறதா என்பது உறுதியாக தெரியவில்லை.





