- Advertisement -
Homeபொழுதுபோக்குபரியேறும் பெருமாள் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க நான் தேர்வு செய்தது அந்த பிரபல நடிகரின்...

பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க நான் தேர்வு செய்தது அந்த பிரபல நடிகரின் மகனை தான் – மாரி செல்வராஜ் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு படைப்பாளியாக கவனம் பெற்றிருக்கிறார். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை என 4 படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் ( காளமாடன்) படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பெரும்பாலும் சமுதாய பிரச்னைகளை குறிப்பாக சாதிய அடக்குமுறை அதிகார துஷ்பிரயோகம் சமூக ஏற்ற தாழ்வுகளை தனது கதைக்களமாக்கி படங்களை இயக்கி வருகிறார். இதில் வடிவேலு குணச்சித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில் கதாநாயகனாக கதிர் நடித்திருந்தார். கதா நாயகியாக ஆனந்தி நடித்திருந்தார். யோகிபாபுவும் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஜாதி பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மறைந்த நடிகர் மாரிமுத்து நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகவும் அழுத்தமாகவும் இருந்தது. எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதும் பரியேறும் பெருமாள் படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மாரி செல்வராஜ், ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் கதையை முதலில் மாரி செல்வராஜ் நடிகர் முரளியின் மகன் அதர்வாவிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் சூழ்நிலை காரணமாக அதர்வா அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த தகவலை தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதர்வா எனது கதையை நிராகரித்தது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது என்று அந்த நேர்காணலில் மாரி செல்வராஜ் ஆதங்கமாக கூறியிருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் கதிர் கேரக்டரில் அதர்வா நடித்திருந்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பார். இன்னும் பல நல்ல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்