- Advertisement -
Homeபொழுதுபோக்குமனைவியிடம் போட்ட சபதம், பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் - அப்படி ஒரு படத்தை...

மனைவியிடம் போட்ட சபதம், பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் – அப்படி ஒரு படத்தை தான் இனி இயக்குவாராம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படைப்பாளியின் திறமை, ஆற்றலுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர்களது இயக்கத்தில் வெளியாகும் சில படங்களே அதை பிரதிபலித்து விடுகின்றன. அதனால் படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, அவர்கள் தருகிற படங்களின் கதை, கதைக்களம், கேரக்டர்கள்தான் மிக முக்கியமாகிறது.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. சேது என்ற படத்தை முதலில் இயக்கிய பாலா, தொடர்ந்து நந்தா பிதாமகன் நான் கடவுள் பரதேசி அவன் இவன் தாரை தப்பட்டை என குறைவான எண்ணிக்கையில்தான் படங்களை தந்தார்.

- Advertisement -

மொத்தம் 25 ஆண்டுகளில் 10 படங்களை கூட தாண்டாத ஒரு இயக்குனராக பாலா இருந்தும், அவரது படங்கள் தனி கவனமும் வரவேற்பும் பெறுகின்றன. இனி அடுத்ததாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வெளியாக உள்ளது. அதே போல் தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்களில் மாரி செல்வராஜூம் ஒருவர்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே அதீத கவனம் பெற்றார். அடுத்து தனுஷ் நடித்த கர்ணன் படமும் பெரிய வெற்றியை பெற்றது. பிறகு உதயநிதி வடிவேலு நடித்த மாமன்னன் படமும், பிறகு வாழை படமும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய கவனம் பெற்ற படங்களாக இருந்தன.

- Advertisement -

ஆனால் மாரி செல்வராஜ் படங்கள் தனிமனித உரிமை, சாதியம், அதிகார வர்க்கம், அராஜகம் போன்ற விஷயங்களை தான் பெரும்பாலும் பேசுகின்றன. அதனால் கடுமையான சர்ச்சையும் விமர்சனங்களும் அவரது படங்களுக்கு ஏற்படுகிறது. ஒரு தரப்பு ரசிகர்கள் மாரி செல்வராஜ் படங்கள் வன்மத்தை தூண்டுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் கதையில் ஒரு படத்தை இயக்குமாறு என் மனைவி என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனால் சமூக பிரச்னைகள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையில் ஒரு படத்தை எடுத்துக் காட்டுகிறேன் என என் மனைவியிடம் சபதம் செய்துள்ளேன் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்