- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படமாச்சே? நடிகர்கள் வடிவேலு - பகத் ஃபாசில் நடித்த மாரீசன் படம், ஓடிடி ரிலீஸ்...

நல்ல படமாச்சே? நடிகர்கள் வடிவேலு – பகத் ஃபாசில் நடித்த மாரீசன் படம், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருப்பவர் வடிவேலு. ஆரம்பத்தில் காமெடி நடிகராக ரசிகர்களை தன்வசியப்படுத்திய வடிவேலு சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறார். குறிப்பாக மாமன்னன் படத்தில் எம்எல்ஏ வாக அவரது நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது.

கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டுகள் வரை காமெடி நடிகராகவும் காமெடி படங்களில் ஹீரோவாகவும் நடித்த நடிகர் வடிவேலு பிறகு சில பிரச்னைகளால் 10 ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்காமல் நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதன்பிறகு நடிகர் விஷால் நடித்த கத்தி சண்டை படத்தில் டாக்டர் பூத்ரி என்ற கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து சிவலிங்கா சந்திரமுகி 2 நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் எலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழையபடி வடிவேலு காமெடி ரசிகர்களிடம் எடுபடவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த கேங்கர்ஸ் படமும் வடிவேலுவுக்கு கம்பேக் தரவில்லை. இதனால் காமெடியில் இனி தனக்கு வாய்ப்பில்லை என வடிவேலு உணர்ந்து விட்டார்.

அதன்பிறகு இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கிய மாரீசன் என்ற படத்தில் வடிவேலுவும் மலையாள நடிகர் பகத் ஃபாசிலும் இரட்டை நாயகர்களை நடித்திருந்தனர். ஏற்கனவே மாமன்னன் படத்திலும் இவர்கள் காம்போ பெரிய சக்சஸ் ஆனதால் மாரீசன் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளுடன் கடந்த மாதம் வெளியானது.

- Advertisement -

ஞாபகமறதி நோயாளியான வடிவேலுவிடம் 25 லட்சம் ரூபாய் வரை நிறைய பணம் இருக்கிறது. அதை தெரிந்துக்கொள்ளும் பகத் ஃபாசில் அந்த பணத்தை அபேஸ் செய்ய நினைக்கிறார். அந்த பணத்தை திருடுவதற்காக வடிவேலுவை பைக்கில் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு செல்கிறார். ஆனால் வடிவேலு செல்லும் இடங்களில் எல்லாம் கொலை நடக்கிறது. சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படம் விமர்சன ரீதியாக கவனம் பெற்றாலும் பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை கொலை செய்யும் ஒரு கேரக்டரில் வடிவேலு அழுத்தமாக நடித்திருந்தார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகிறது. வருகிற 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாரீசன் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படமும் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்