- Advertisement -
Homeபொழுதுபோக்குவலுக்கும் எதிர்ப்பு... நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட நயன்தாரா திரைப்படம்...

வலுக்கும் எதிர்ப்பு… நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட நயன்தாரா திரைப்படம்…

- Advertisement -

நடிகை நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடித்த அறம், மாயா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் அதன் பிறகு அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

இது ஒரு பக்கம் இருக்க நடிகைக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது அவர் அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில், மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1960-களில் நடப்பது போல் இந்த படம் எடுக்கப்படுகிறது. இதில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நயன்தாரா நடிதது முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் சசிகாந்த் தான், இந்த திரைப்படத்தின் இயக்குனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், மாதவன் சித்தார்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள், முடிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த அவர், தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை என்று கூறியிருந்தார். இனிமேல் தனது படத்திற்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் போட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரின் 75 வது திரைப்படம் ஆக அன்னபூரணி ரிலீஸ் ஆகி இருந்தபோது, அதில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் போடப்பட்டிருந்ததை குறிப்பிட்டு நயன்தாரா இவ்வாறு தெரிவித்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நீலேஷ் கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை எடுத்திருந்தார். சத்யராஜ் ஜெய் உள்ளிட்டோர் இதில் நடித்து இருந்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே அல்லோல பட்டிருக்க, அந்த சமயத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு ஓடிடி தளத்தில் படம் திரையிடப்பட்டது. அதில் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி இருப்பதாகவும், ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் லவ் ஜிகாத்தை தூண்டும் வகையில் இந்த படம் இருப்பதாக கூறி, விசுவ இந்து பரிசித் அமைப்பு, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம், விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பிராமண சமூகத்தை புண்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியையும் வேண்டுமென்றே தாங்கள் அமைக்கவில்லை என்றும், யார் மனதாவது புண்பட்டு இருந்தால் தாங்கள் மன்னிப்பு கூறுவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் படத்தின் சர்ச்சைக்குள்ளான காட்சிகள் எடிட் செய்யும் வரை, netflix ott தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படத்தை நீக்குவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

சற்று முன்