- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்மை பத்தி மத்தவங்க எப்படியோ நினைச்சுட்டு போறாங்க… பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்ட பாடகி கெனிஷா...

நம்மை பத்தி மத்தவங்க எப்படியோ நினைச்சுட்டு போறாங்க… பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்ட பாடகி கெனிஷா – நடிகர் ரவிமோகன் குறித்து பதிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் ரவி மோகன். ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்ட அவர் இப்போது தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர் நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்கிறார்.

கடந்த 2010ம் ஆண்டில் ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்த நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தியின் தயாரிப்பாளர் பிரபல சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது மருமகன் நடிகர் ரவி மோகன் நடித்த சில படங்களையும் சொந்தமாக தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்தாண்டில் நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பிறகு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். இந்த விவாகரத்து வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருவது ரசிகர்கள் அறிந்ததுதான்.

இந்நிலையில் பாடகி கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அவருக்கு நடிகர் ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பாடகி கெனிஷா பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த பதிவில் பாடகி கெனிஷா கூறியிருப்பதாவது, சின்ன வயசுல இருந்தே பல நேரங்களில் என்னை ஒரு ஆளாக யாரும் மதிக்கவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வெச்ச மாதிரியே ஒரு உணர்வு இருந்தது. நான் பெருசா எதிர்பார்ப்பதாக பலர் நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு சின்ன அன்பும், மதிப்பும் மட்டும் தான். அப்புறம் ரவி மோகன், நீங்க வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு. என்னுடைய எண்ணங்கள் செயல்கள் காதல் பற்றிய என்னோட பார்வை எல்லாமே புதுசா இருந்துச்சு.

மத்தவங்க இதை எப்படி வேணாலும் நினைக்கலாம். ஆனால் நம்மை பத்தி தெரிஞ்சவங்களுக்கும் நாம் எவ்வளவு உண்மையாக நிம்மதியாக இருக்கோம் என்பது புரியும். என்னோட கஷ்டமான நேரங்களில் எனக்கு துணையாக நின்று என்னோட ஒவ்வொரு சின்ன வெற்றியை கூட உங்க வெற்றியாக நீங்க கொண்டாடினீங்க. அதுக்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என்று கெனிஷா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்