- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு தயவு செஞ்சு விடுதலை வாங்கி கொடுங்க- நீதிமன்றத்தின் படிகளை ஏறிய மயில்சாமியின் மருமகள், எப்படி...

எனக்கு தயவு செஞ்சு விடுதலை வாங்கி கொடுங்க- நீதிமன்றத்தின் படிகளை ஏறிய மயில்சாமியின் மருமகள், எப்படி இருந்த குடும்பம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமி, கடந்த பிப்ரவரி மாதம் நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் இறந்த பிறகுதான் அவர் பலருக்கும் செய்த உதவிகள் குறித்து வெளிவரத் தொடங்கின. மயில்சாமி மிகப் பெரிய வள்ளலாக வாழ்ந்திருக்கிறார் என்பது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

மயில்சாமி தொடக்கத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், அதனை தொடர்ந்து பல காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். குறிப்பாக ஸ்டாண்ட் அப் காமெடியனாக பல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யும் குரல் வளத்தை பெற்றிருந்தவர் மயில்சாமி.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. மயில்சாமிக்கு  அருமைநாயகம் என்ற ஒரு மகன் உண்டு. அவருக்கு அன்பு என்று பெயரை மாற்றி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அதன் பின் அன்பு ஒரு நடிகராக ஜொலிக்கவில்லை.

அதனை தொடர்ந்து அன்புவுக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் மயில்சாமி. அவர்கள் இருவரும் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு கணவன் மனைவிக்குள் பல பிரச்சனைகள் வந்ததாம். அந்த பிரச்சனைகளை எல்லாம் மயில்சாமிதான் தீர்த்து வைப்பாராம். மயில்சாமி இருக்கும்வரை அவர்களுக்கு பிரச்சனை எழாதவாறு பார்த்துக்கொள்வாராம்.

- Advertisement -

மயில்சாமி இறந்த பிறகு அவர்களின் பிரச்சனையை தீர்க்க ஆள் இல்லாததால் அன்புவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சண்டை முத்திவிட்டதாம். இந்த நிலையில் தற்போது மயில்சாமியின் மருமகளான ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளாராம். இது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்