நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க முக்கியமான நடிகர். இவரது 50வது படம் கேப்டன் மில்லர், வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இது தனது 50வது படம் என்பதால், இடைவெளியின்றி ஷூட்டிங் தொடர்ந்து நடந்து முடிந்திருக்கிறது. தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், பொங்கலுக்கு என்பது உறுதியாகி விட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்துக்கு போட்டியாக, கேப்டன் மில்லர் படத்தை களமிறக்க வேண்டும் என்பது, தனுஷின் முக்கிய உத்தரவாக இருந்திருக்கிறது. தன்னால் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், தன்னை மீறிய வளர்ந்து நிற்பது தனுஷ்க்கு பிடிக்கவில்லை. இன்னும் தன் மாமனார் ரஜினி 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதும் தனுஷின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியதாக தெரிகிறது.
கேப்டன் மில்லர் படம், மொத்தம் ஐந்தரை மணி நேரம் படமாக புட்டேஜ் உள்ளது. இதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என, படக்குழுவினர் ஆசைப்பட்டாலும் அதற்கு தனுஷ் சம்மதிக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே மாரி 2, வேலை இல்லா பட்டதாரி 2 ஆகிய படங்கள் தனுஷ்க்கு தோல்வி படங்களாக அமைந்துவிட்டன.
அதுமட்டுமின்றி நானே வருவேன் 2, புதுப்பேட்டை 2, வடசென்னை 2 ஆகிய படங்கள் வரவேண்டி உள்ளதால், அந்த 2ம் பாகம் படங்களிலும் அவர் நடிக்க வேண்டும். சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் வந்த சந்திரமுகி 2 தோல்வி படமாகி போனதால், 2ம் பாகம் என்றாலே, தனுஷ்க்கு குப்பென வியர்த்து விடுகிறது என்னும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
அதுமட்டுமின்றி கேப்டன் மில்லர் படத்தில் சிக்ஸ் பேக்கில் நடிக்க தனுஷ் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். காலை 4 மணி முதல் இரவு 7 மணி நேர கூடவே இருக்கும் டிரெயினர் பலவித கட்டுப்பாடுகளை விதித்து தனுஷை ட்ரில் எடுக்கிறார்,. 6 லிட்டர் தண்ணீர் குடிப்பது, 200 கிராம் காய்கறி, 200 கிராம் பருப்பு சாப்பிடவும் வற்புறுத்தி பலவிதங்களில் அவரை டார்ச்சர் செய்கிறார்.
இதனால் இரண்டாம் பாகம் என்றால், மீண்டும் இதே பார்மூலா, ரூல்ஸ் என சிரமப்பட வேண்டியிருக்கும். தவிர 2ம் பாகம் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை என்பதால், கேப்டன் மில்லர் இது ஒண்ணே போதும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறி இருக்கிறார் தனுஷ். ஆனால், ஐந்தரை மணி நேர புட்டேஜ் படத்தை இரண்டரை மணி நேரமாக குறைக்கத்தான் டைரக்டர், எடிட்டிங் பிரிவு சார்ந்த படக்குழுவினர் தலையை பிய்த்துக்கொள்கின்றனர்.





