மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒவ்வொரு முதல்வருக்கும் பேசிய பஞ்ச் டயலாக் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் இன்றைய முதல்வர் விஜய்க்கு அவர் கூறிய அந்த வசனம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது கலைஞருக்கு கேடயமாக இருப்பேன் என்று வைகோ கூறினார். பிறகு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது விஜயகாந்துக்கு காவலனாக இருப்பேன் என்று வைகோ கூறியிருந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு நான் அரணாக இருப்பேன் என்றும் கூறியிருந்தார். முதல்வராக ஸ்டாலின் இருந்த போது ஸ்டாலினுக்கு நான் கவசமாக இருப்பேன் என்றார். இப்போது முதல்வர் விஜய்க்கு அவர் ஆட்சியை கலைக்க யாராவது முயற்சித்தால், அவரது ஆட்சிக்கு பிரச்னை என்றால் தற்கொலை படையாக மாறுவேன் என்று கூறியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





