- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் படம்னாலே இந்த சீன் இருக்கும். கேரனுவனுக்கு சென்று அழத மீனா. இறுதியில் நடந்தது என்ன?...

கமல் படம்னாலே இந்த சீன் இருக்கும். கேரனுவனுக்கு சென்று அழத மீனா. இறுதியில் நடந்தது என்ன? – விவரம் இதோ

- Advertisement -

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மீனா, ஜெமினி கணேசன், எஸ்.பி.பி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான “அவ்வை சண்முகி” படமானது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகன் பாத்திரம் இன்றி பெண் வேடமிட்டும் அந்த படத்தில் மீனாவுக்கு ஜோடியாக தனது நடிப்பில் அசத்தினார்.

அதோடு ஜெமினி கணேசனை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது இந்த நடிப்பு அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றிருந்தது. “அவ்வை சண்முகி” படத்தில் பெண் வேஷம் இட்டு கமலஹாசன் நடித்ததை தொடர்ந்து கதாநாயகர்களும் பெண் வேஷம் இடலாம் என்கிற ட்ரெண்டிற்கே முதல் ஆளாக அதனை வித்திட்டவர் உலக நாயகன் தான் என்றால் அது மிகையல்ல.

அந்த அளவிற்கு அவ்வை சண்முகி படத்தில் தனது நடிப்பின் மூலம் அசாத்தியமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கமலஹாசன் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் நடித்திருந்த கதாநாயகி மீனா சமீபத்தில் அளித்திருந்த ஒரு பேட்டி ஒன்றில் அந்த படத்தில் நடிக்கும் போது கமலஹாசன் ஒவ்வொரு படத்திலும் முத்த காட்சியில் நடிப்பார் என்று எனக்கு தெரியும் என்றும் அந்த காட்சியை படமாக்குகிறோம் என கே எஸ் ரவிக்குமார் கூறியதும் பயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Meena-and-Kamal

இது குறித்து அவர் கூறுகையில் : கமலஹாசனின் ஒவ்வொரு படத்திலும் முத்த காட்சி வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனவே கே எஸ் ரவிக்குமார் அதனை என்னிடம் தெரிவித்த உடனே நான் கேரவனுக்கு சென்று என் அம்மாவிடம் அழுது விட்டேன். ஆனால் கமலஹாசன் என் அருகில் முத்தம் கொடுப்பது போல வந்து முத்தக்காட்சி இல்லை என்று கூறினார்.

அதனால் நான் சந்தோஷப்பட்டேன் என்று நடிகை மீனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவ்வை சண்முகி படத்தில் மீனா மற்றும் கமலஹாசன் ஆகியோரது ஜோடி பலராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட வேளையில் இந்த தகவலை தற்போது மீனா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்