- Advertisement -
Homeபொழுதுபோக்குபுறநானூறு படத்திற்கான களத்தை மாற்றும் சுதா கொங்கரா... சூர்யாவுக்கு பதில் நடிக்கப் போவது இவரா... துல்கர்...

புறநானூறு படத்திற்கான களத்தை மாற்றும் சுதா கொங்கரா… சூர்யாவுக்கு பதில் நடிக்கப் போவது இவரா… துல்கர் கேரக்டருக்கும் கச்சிதமாக வேறு ஒரு நடிகரை பிடித்த இயக்குனர்…

- Advertisement -

துரோகி, இறுதிச்சுற்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கராவுக்கு, மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது சூரரைப் போற்று. சூர்யா, அபர்ணா பால முரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவானது. கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

 

- Advertisement -

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தை, நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் விற்பனை செய்தது படக்குழு. கொரோனா காலம் என்பதால் இந்த முடிவை தயாரிப்பாளரான சூர்யா எடுத்தார். ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களும் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர். சூர்யா படத்தை இனி தியேட்டரில் ஒளிபரப்பவே மாட்டோம் என்று கூறினர்.

 

- Advertisement -

அதேசமயம் ஓடிடி தளத்தில் வெளியான சூழலை போற்று திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. முக்கியமாக சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். விமானத்தின் நிறுவனராக வேண்டும் என போராடும் இளைஞரின் வாழ்க்கையை, கண்முன்னே விரிவு படுத்தி கலங்கடித்து இருந்தார் சூர்யா.

 

இதுபோக ஊர்வசி, பூ ராமு உள்ளிட்டோரின் நடிக்கும் பாராட்டைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைவரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்து முடித்ததால், சூர்யாவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

 

இதே போல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யா பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத வேளையில், சுதா கொங்கரா – சூர்யா இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் புறநானூறு என்றும் டைட்டில் வைக்கப்பட்டது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், துல்கர் சல்மான், விஜய் சர்மா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிராக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்பட்ட வேளையில், படத்திற்கான பணிகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து விட்டார். இதனால் புறநானூறு திரைப்படத்திற்கான தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தை வேறு ஒரு நடிகருக்காக சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்த இயக்குனர், புறநானூற்றில் துல்கருக்கான கதாபாத்திரத்தை கூறியிருக்கிறாராம். அதுவும், எஸ் கே வுக்கு பிடித்து போய்விட்டதாம். இதேபோல், சூர்யா கதாபாத்திரத்திற்கு, தனுஷை அணுகி இருக்கிறாராம் சுதா. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்