- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க சொல்ற மாதிரி படம் எடுக்க நான் ஆள் கிடையாது, தனுஷூக்கு டாட்டா காட்டிச் சென்ற...

நீங்க சொல்ற மாதிரி படம் எடுக்க நான் ஆள் கிடையாது, தனுஷூக்கு டாட்டா காட்டிச் சென்ற மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குனர் – அப்செட் ஆன தனுஷ்!

- Advertisement -

சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போடுகிற மலையாளப் படம் மஞ்சும்மெல் பாய்ஸ். கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை இந்த படம் கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் என்ற நண்பர் குழு, கொடைக்கானலுக்கு பிக்னிக் வருகின்றனர். அங்கு குணா குகையை பார்க்கச் சென்று, தடையை மீறி ஆபத்தான பகுதிக்கு நுழைகின்றனர். அப்போது, அந்த நண்பர்களில் ஒருவர் பாதாள சுரங்கத்துக்குள் தவறி விழுந்துவிட, அவரை நண்பர்களே போராடி மீட்பதுதான் கதை.

- Advertisement -

இதில் குணா குகை என்ற விஷயமும், கமல் நடித்த குணா படக் காட்சிகளும் பாடலும் படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட்டிவ் ஆக அமைந்துவிட்டது. இது சிலவரி சாதாரண கதையாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதமும், காட்சியமைப்பும், நண்பர்களின் போராட்டமும் படத்தை வேற லெவலில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்த படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம், ஏற்கனவே சில படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவரது ஜான் ஈ மேன் என்ற முதல் படத்தில் நடித்த கதாநாயகி, பிராப்தி எலிசபெத் என்பவர் சிதம்பரம் மீது மீ டூ என சில குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இயக்குநர் சிதம்பரத்துக்கு தமிழில் படம் இயக்க அதிக வாய்ப்புகள் தேடி வருகிறது. இதில் தயாரிப்பாளர் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தை சிதம்பரம் இயக்கவும், அந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவும் முடிவானது. இதற்கான பேச்சுவார்த்தையில் மதுரை அன்பு, தனுஷ், சிதம்பரம் கலந்து பேசியுள்ளனர்.

அப்போது தனுஷ், யாரடி நீ மோகினி போன்ற காதலை மையப்படுத்தி பேண்டஸி படமாக அது இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை சொல்லுங்கள் என இயக்குநர் சிதம்பரத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், அப்படி ஒரு கதையை நான் யோசிக்கவில்லை. அப்படிப்பட்ட படம் எடுக்க எனக்கு இப்போதைக்கு விருப்பமும் இல்லை. அதனால் பிறகு பார்க்கலாம், என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பல மடங்கு சம்பளம் கோடிகளில் கிடைக்கும் நிலையிலும், கதாநாயகனுக்காக கதை உருவாக்க மாட்டேன் என்று தனுஷை மறுத்து சென்ற மலையாள பட இயக்குநர் சிதம்பரம், ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் தமிழ் இயக்குநர்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்