- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷின் வளர்சிக்கு அவரெல்லாம் காரணமில்லை.. விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கிறார்.. மீசை ராஜேந்திரன் ஓபன் டாக்

தனுஷின் வளர்சிக்கு அவரெல்லாம் காரணமில்லை.. விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கிறார்.. மீசை ராஜேந்திரன் ஓபன் டாக்

- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் உருவ கேலிகளை சந்தித்தவர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திறமையை வளர்த்துக்கொண்டு இப்போது முன்னணி நடிகர் என்பதோடு மட்டுமில்லாமல் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் தனது நடிப்பில் அசால்ட் செய்பவர்.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் ஆகிய மொழிகளிலும் தடம் பதித்து அங்கும் வெற்றியை கண்டிருக்கிறார். வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்திருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் அடுத்த படமான கேப்டன் மில்லர் மேல் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் அவர்.

கேப்டன் மில்லர் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதனையடுத்து தன்னுடைய 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம், அருண் மாதேஸ்வரனுடன் மீண்டும் ஒரு படம் என லைன் அப்பை படு பிஸியாக வைத்திருக்கிறார்.

இதற்கிடையே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் கடந்த சில வருடங்களாக அவரை பிரிந்து வாழ்ந்துவருகிறார். ஐஸ்வர்யாவை அவர் திருமணம் செய்ததே ரஜினியை வைத்து சினிமாவில் வளர்வதற்காகத்தான் என்று பலரும் கூறினார்கள். ஆனால் தனுஷோ தனது திறமையை துணையாக வைத்து மட்டுமே வளர்ந்திருக்கிறார் என்பது பெரும்பாலானோரின் கருத்து.

இந்நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் தனுஷ் குறித்து பேசுகையில், “விஜய், அஜித்துக்கே தனுஷ் இப்போது டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். இதெல்லாம் தனுஷுடைய திறமைக்கு கிடைத்த வெற்றி. அவருக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை. ரஜினி உதவி செய்யும் அளவுக்கு தனுஷின் திறமையும் இல்லை.

அவர் வேற லெவலுக்கு சென்றிருக்கிறார். சிம்புவை தனுஷுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார்கள். ஆனால் விஜய், அஜித்துக்கே தனுஷ் பக்கம் நெருங்க முடியாதபோது சிம்புவெல்லாம் ஒன்றுமே இல்லை. தனுஷின் இந்த வளர்ச்சி ரொம்ப பெரியது. அதனால்தான் அவரால் ஒரே நேரத்தில் 7 முதல் 8 படங்கள்வரை நடிக்க முடிகிறது” என்றார்.

சற்று முன்