- Advertisement -
Homeபொழுதுபோக்கு31 ஆண்டுகளாக உழைத்தேன், எனக்கு தேர்தலில் சீட் இல்லையா? - கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதம்...

31 ஆண்டுகளாக உழைத்தேன், எனக்கு தேர்தலில் சீட் இல்லையா? – கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்த பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் காமெடி கேரக்டரிலும் நடித்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். நடிகர் விஜயகாந்துடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார், குறிப்பாக போலீஸ் அதிகாரி கிராம பஞ்சாயத்து தலைவர் போன்ற கேரக்டரில் பல படங்களில் மீசை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, நான் கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளாகவும் தேமுதிக கட்சியில் 21 ஆண்டுகளாகவும் உழைத்திருக்கிறேன். இப்போது தேமுதிக கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறேன். இந்த பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுவரை 3 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த முறை தேமுதிக தரப்பில் வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து மீசை ராஜேந்திரன் கூறுகையில், நான் 31 ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் மன்றத்தில் இருந்தேன். 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். விஜயகாந்துக்கு விசுவாசமாக இருந்தேன். ஆனால் எனது விசுவாசத்திற்கு தகுந்த மதிப்பும் மரியாதையும் இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இதனால் அங்கிருந்து நான் விலகுகிறேன். கேப்டன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எனக்கு எந்தவிதமான மனவருத்தமும் கிடையாது. கேப்டன் இல்லை என்றால் நான் இல்லை. சினிமா உட்பட அனைத்து இடங்களிலும் கேப்டன் தான் எனக்கு வாய்ப்பு தந்தார். ஆனால் இப்போது தேமுதிகவில் இருக்கும் சூழ்நிலைகள் சரியில்லை. நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களால் சூழல் சரியில்லை. இதனால் நான் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் மீசை ராஜேந்திரன் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சினிமாவில் நடிக்க விஜயகாந்த் தான் வாய்ப்பு தந்தார். அதனால் விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக மீசை ராஜேந்திரன் மாறினார். மேலும் தேமுதிக கட்சியை விஜயகாந்த் தொடங்கியதும் அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2026 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தொடர்ந்து 2016, 2021 சட்டசபை தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட்டு மீசை ராஜேந்திரன் தோல்வி அடைந்தார். இந்த முறை தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. தேமுதிகவுக்கு மொத்தம் 10 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் வழங்கப்பட்டது. இதில் மீசை ராஜேந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் இருந்து அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவிக்கும்படி அவர் தேமுதிக தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்