இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர்கள் என்று கேட்டால் நிச்சயம் அதில் முதல் ஆளாக இடம் பிடித்தார் ராஜமவுலி. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் அவர், பாகுபலி திரைப்படத்தை எடுத்து புகழின் உச்சிக்கு சென்றார். அது மட்டுமல்ல தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி புகழ் சேர்த்தார் ராஜமவுலி.
அந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பாகுபலி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படத்திற்கு பிறகு ஆர் ஆர் ஆர் படத்தை எடுத்தார் ராஜமௌலி.
சொல்லி அடித்த கில்லியாக இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்தார் ராஜமவுலி.
அதற்கான ரிசல்ட் ஸ்பெஷல் ஆக கிடைத்தது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் வைத்த அவர், வெறும் பாடல்கள் மட்டுமல்ல கதையிலும் ஆச்சரியங்களை புகுத்தி ரசிகர்களை வியக்க வைக்கலாம் என்பதை நிரூபணம் செய்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி தனது அடுத்த திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த முறை அவர், தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு உடன் இணைய இருக்கிறார். வனம் மற்றும் அதனை சார்ந்த கதையாக இது ஏற்கப்படுகிறது. ராமாயணத்தில் ஆஞ்சநேயர் கதாபாத்திரத்தை தொடர்பு படுத்தி இதன் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் மகேஷ்பாபு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என்றும் தெரிகிறது. அமேசான் காடுகளில் இதன் சூட்டிங்கை நடத்த மகேஷ் பாபு திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு, நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார் நாசர். வசன உச்சரிப்பு முதல் பல்வேறு பணிகளை அவர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சியில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பங்கேற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த பயிற்சி மகேஷ் பாபுவுக்கு தான் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





