- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவு 10 மணிக்கு போன் செய்த நடிகர் ரஜினி, எந்த ரஜினி என்று திருப்பிக் கேட்ட...

இரவு 10 மணிக்கு போன் செய்த நடிகர் ரஜினி, எந்த ரஜினி என்று திருப்பிக் கேட்ட பிரபல பாடகர் – கடைசியில் பிரியாணி சாப்பிட்ட சூப்பர் ஸ்டார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் மிக பிரபலமானவர் மனோ. மதுர மரிக்கொழுந்து வாசம் செண்பகமே செண்பகமே முக்காலா முக்காப்புலா அழகிய லைலா என பல நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை பாடியவர் மனோ. சிங்காரவேலன் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் நண்பராகவும் மனோ என்ற பெயரில் நடித்திருந்தார்.

பாடகராக மட்டுமின்றி மனோ பின்னணி குரல் கலைஞராகவும் பல படங்களுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் வெளியாகும் ரஜினி படங்களுக்கு ரஜினிக்கு டப்பிங் பேசிக்கொண்டு வருபவர் பாடகர் மனோதான். அதே போல் தெலுங்கில் வெளியான பல கமல் படங்களுக்கு பின்னணி பேசியவர் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் ரஜினி குறித்து ஒரு நிகழ்ச்சியில் பாடகர் மனோ கூறியதாவது, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி தெலுங்கு படத்தின் டப்பிங் முடித்துவிட்டு இரவு நான் வீட்டுக்கு போனேன். நைட் 10 மணிக்கு எனக்கு போன் வருது. நான் எடுத்து ஹலோ சார் என்றேன். அப்போ மனோ சார், எப்படி இருக்கீங்க உங்க டப்பிங் நான் பார்த்தேன் என்றார். யார் சார் பேசறீங்க என்று நான் கேட்டேன்.

ஏனென்றால் நைட் 10 மணி, நான் ரஜினி பேசறேன் என்றார். எந்த ரஜினி என்று கேட்டுவிட்டேன். நைட் 10 மணி என்பதால் யாராவது மேனேஜர் பேசி ரஜினி சார் பேசுவார் என்பதால், நான் அப்படி கேட்டு விட்டேன். ஆனால் பிறகு அவர் பேசிய தொனியை வைத்து அது ரஜினிதான் என்று தெரிந்துக்கொண்டேன்.

- Advertisement -

ஸாரி சார், சில மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் இந்த மாதிரி கூப்பிட்டு உங்க வாய்ஸ்சில் பேசி கலாய்ப்பார்கள். அப்படி தவறுதலாக நினைச்சுட்டேன் என்றேன். அது ஒன்னும் பிரச்னை இல்லே. சந்திரமுகி தெலுங்கு வெர்சன் பெண்டாஸ்டிக்கா இருக்குது. உங்களுக்கு என்ன வேணும் என்று என்னிடம் கேட்டார்.

நாளைக்கு பிரியாணி செஞ்சு வீட்டுக்கு அனுப்பறேன் சார். நீங்க சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அனுப்புங்க ஹா ஹா என்று அவரது ஸ்டைலில் சிரித்துவிட்டு போனை வைத்துவிட்டார். அது மறக்க முடியாத அனுபவம். ஒரு டெக்னிஷீயனுக்கு டப்பிங் வாய்ஸ் தர்ற ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு போன் பண்ணி அந்த நேரத்துல பாராட்டறது அவரோட உயர்ந்த குணத்துக்கு ஒரு உதாரணம் என்று பாடகர் மனோகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்