- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ ஆடியோ லான்ச்... விஜய்க்கு வந்த பயம்... எல்லாம் இவர்கள்தான் காரணமாம்... தேடி அலையும் ப்ரொடியூசர்

லியோ ஆடியோ லான்ச்… விஜய்க்கு வந்த பயம்… எல்லாம் இவர்கள்தான் காரணமாம்… தேடி அலையும் ப்ரொடியூசர்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது லியோ திரைப்படம். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களும் தொடர்ச்சியாக ஹிட்டாகி இருந்தன. அதிலும் விக்ரம் படம் மெகா பிளாக்பஸ்டர் ஆகி லோகேஷ் கனகராஜை இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக மாற்றியது. அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு கோலிவுட் தொடங்கி பாலிவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள்வரை ஆசை இருப்பதாக வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

எனவே கோலிவுட்டில் தற்போதைய மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ்தான். இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார் லோகேஷ். இவர்கள் இருவருமே ஏற்கனவே மாஸ்டர் படம் என்ற மெகா ஹிட் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர். எனவே இந்தப் படம் மூலமும் மெகா ஹிட் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது

காஷ்மீரில் ஆரம்பித்த ஷூட்டிங் சென்னையில் முடிவடைந்தது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சர் அலிகான், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளனர். படமானது அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது

இந்த சூழலில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே இருக்கிறது. ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் ரஜினி சொன்னது போல் ஏதேனும் ஒரு குட்டி கதையை சொல்லி விஜய் பதிலடி கொடுப்பாரா இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தை கடந்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எகிறி இருக்கிறது

லியோ ஆடியோ லான்ச் ஆனது மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் நடைபெறும் என்று அதன் தயாரிப்பாளர் லலித் கூறியிருந்தார் ஆனால் இப்போது மலேசியாவிற்கு லியோ ஆடியோ லான்ச் மாற்றிவிட்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதற்கு ஒரு காரணமாக ஒரு விஷயம் கூறப்படுகிறது.

அதாவது விஜய் சமீப காலமாக தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அரசியல் வருகைக்கான சமிக்ஞையை காட்டிக்கொண்டிருப்பதாக ஒரு பேச்சு ஓடுவது அனைவரும் அறிந்தது. அதனை ஒட்டி மதுரையில் ரசிகர்கள்; விஜய்தான் அடுத்த முதல்வர் என்கிற தொனியில் போஸ்டர்களை அடித்து வருகின்றனர். இதற்கிடையே படத்தின் ஆடியோ லான்ன்ச்சை மதுரையிலே நடத்த விஜய் திட்டமிட்டு இருந்தாராம்.

ஆனால் மதுரை ரசிகர்களின் இது போன்ற செயல்களால் பயந்து போன விஜய் வம்பே வேண்டாம் வெளிநாடுகளில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது. அனேகமாக செப்டம்பர் 23 அல்லது செப்டம்பர் 30ஆம் தேதி மலேசியாவில் படத்தின் ஆடியோ லான்ச் ஜோராக நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது

சற்று முன்