- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்துல அவர் நடிச்சா நான் நடிக்கிறேன், இல்லேன்னா நடிக்க மாட்டேன் - மக்கள் திலகம்...

இந்த படத்துல அவர் நடிச்சா நான் நடிக்கிறேன், இல்லேன்னா நடிக்க மாட்டேன் – மக்கள் திலகம் இப்படி பிடிவாதமாக சொல்ல காரணம் என்ன தெரியுமா?

- Advertisement -

அந்த கால தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர்கள் பீம்சிங் மற்றும் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இவர்களது திரைப்படங்கள் அழுத்தமான உணர்வுபூர்வ மிக்க உறவுகளை சுற்றி சுழலும் குடும்பப் பின்னணி கொண்ட கதைகளாக இருந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்து படம் இயக்கியது இல்லை.

தங்களது கதைக்கு ஏற்ற நடிகர்களையே அவர்கள் படங்களில் தேர்வு செய்து நடிக்க வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தனர். இதில் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர் எடுக்க இருந்த ஒரு படத்திற்கு எம்ஜிஆரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய விரும்பினார். எம்ஜிஆரிடம் அவர் கதை சொல்ல கதையைக் கேட்ட எம்ஜிஆர் அந்த கதையில் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் டி எஸ் பாலையாவை நடிக்க வைக்குமாறு இயக்குனரிடம் கூறினார்.

- Advertisement -

ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் எஸ்வி ரங்காராவை ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் அவர்தான் அந்த கேரக்டருக்கு சரியான தேர்வாக இருப்பார் என்றும் இயக்குனர் கூறியிருக்கிறார் ஆனால் நடிகர் டி எஸ் பாலையாவை அந்த கேரக்டரில் நடிக்க வைப்பதாக இருந்தால் இந்த படத்தில் நான் நடிக்கிறேன். இல்லையென்றால் நீங்கள் வேறு யாரையாவது படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி அந்த படத்தை எம்ஜிஆர் நிராகரித்து விட்டார்.

அப்படி எம்ஜிஆர் நிராகரித்த நடிக்க மறுத்த படம்தான் நடிகர் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த வெளிவந்த கற்பகம் திரைப்படம். அந்தப் படம் 1963ம் ஆண்டு வெளியானது. நடிகை கேஆர் விஜயா இந்த படத்தில் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்படி ஒரு படவாய்ப்பை எம்ஜிஆர் டிஎஸ் பாலையாவுக்காக மறுக்க பின்னணி உள்ளது. எம்ஜிஆர் டி எஸ் பாலையாவும் இரட்டை கதாநாயகர்களாக இணைந்து நடித்து 1948ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் மோகினி. இந்த படத்தில் கதாநாயகன் யார் என்ற பிரச்சனை எழுந்த போது எம்ஜிஆர் கதாநாயகனாக இருக்கட்டும். நான் துணை நாயகனாக இருக்கின்றேன் என்று டிஎஸ் பாலையா அப்போது எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்திருந்தார்.

அதை மறக்காமல் மனதில் வைத்து அந்த நன்றிக்காக எம்ஜிஆர் தனக்கு நடிக்க வாய்ப்பு வந்த கற்பகம் படத்தில் டிஎஸ் பாலையாவையும் நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். அது நடக்காமல் போனதால் அந்த வாய்ப்பையே எம்ஜிஆர் நிராகரித்து இருக்கிறார். தனக்கு டிஎஸ் பாலையா உதவியதை மறக்காமல் எம்ஜிஆர், கற்பகம் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு இல்லாததால் அந்த படத்தையே அவர் நிராகரித்ததும் டிஎஸ் பாலையா மீது எம்ஜிஆர் கொண்டிருந்த ஆழமான நட்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்