- Advertisement -
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் எம்என் நம்பியார் வில்லன். ஆனால் நிஜத்தில் எம்ஜிஆருக்கும் அவருக்கும் நெருக்கமான நட்புண்டு. அதனால் எம்ஜிஆரை நம்பியார் கிண்டலடிப்பது வழக்கம். எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெற்றி விழா நடந்தபோது மேடையில் எம்ஜிஆர் பேசுவதற்காக 2 மைக் வைக்கப்பட்டது. அதாவது அவர் பேசுவது தெளிவாக அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால் 2 மைக் வைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நம்பியார், நாங்க பேசும்போதெல்லாம் ஒரு மைக் தான். எம்ஜிஆருக்கு மட்டும் 2 மைக்கா என்று கோபமாக கேட்டு கிண்டல் செய்திருக்கிறார். அதற்கு மைக்கில் பேசும் போது பதிலளித்த எம்ஜிஆர், நான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு மட்டும் 2 மைக் என்று நம்பியாருக்கு பதிலடி தந்து அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.





