- Advertisement -
Homeபொழுதுபோக்குமிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மோகன்லாலின் எம்புரான்... சாதித்ததா இல்லை சறுக்கியதா... வாங்க பார்க்கலாம்...

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மோகன்லாலின் எம்புரான்… சாதித்ததா இல்லை சறுக்கியதா… வாங்க பார்க்கலாம்…

- Advertisement -

மலையாள திரை உலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் எம்புரான். இதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கொடுத்த தாக்கம் தான். லூசிபராக வெளியான அந்த திரைப்படம், மலையாள திரை உலகை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை இயக்கியது வேறு யாரும் அல்ல, பிரித்வி ராஜ்தான். மலையாள திரை உலகை தாண்டி, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரையுலகிலும் நடிகராக அவர் வலம் வருகிறார். ஆனால் சமீப நாட்களாக அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

- Advertisement -

நடிப்பை தாண்டி இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் பிரித்விராஜின், கை வண்ணத்தில் எம்புரான் எடுக்கப்பட்டது. இதில் மோகன் லாலாத் தாண்டி, டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குனர் பிரிதிவிராஜும் இதில் நடிகராக இடம்பெற்று இருந்தார். பிரம்மாண்ட செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. முதல் பாகமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததால், முன்பதிவு தாறுமாறாக இருந்தது. கிட்டத்தட்ட அதில் மட்டுமே 58 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் பலரும் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். எம்புரான் திரைப்படத்தை பார்த்த பலரும், அதன் நீளத்தைதான் குறை கூறுகிறார்கள். முதல் பாகத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் நிறைய இருந்ததாகவும், ஆனால் அது இதில் மிஸ் ஆவதாகவும் தெரிவிக்கின்றனர். வெறும் பழி வாங்கும் கதையாகவே இது உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும் ஒளிப்பதிவு ரீதியாகவும் இந்த திரைப்படம் சூப்பராக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. இரண்டாம் பாதியில் சில மாஸ் காட்சிகளும் இருக்கிறதாம். படத்தில் 50 நிமிடங்கள் கழித்துதான் மோகன் லாலே வருகிறாராம். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் வசனங்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் இருக்கிறதாம். பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், சாதாரணமாக அமைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்